மகேஷ்பாபு வெளியிட்ட முபாசா ஆங்கிலபட போஸ்டர்

சிங்கத்தை கதாபாத்திரமாக வைத்து கால்ஷீட் பிரச்சினை இல்லாமல் 1994 ஆம்ஆண்டு ‘தி லயன் கிங்’ என்ற பெயரில் கார்டூன் டெக்னாலஜியிலும், அதே பெயரில் 2019-ம் ஆண்டு அனிமேஷன் தொழில்நுட்பத்திலும் படங்கள் வெளியாகின.இந்த லயன் கிங் படத்திற்கு என்று தனியான ரசிகர் கூட்டம்உள்ளது. தற்போது, சூழ்ச்சியால் கொலை செய்யப்படும் சிம்பாவின் தந்தை முபாசா கடந்து வந்த பாதையை வைத்து முபாசா : தி லயன் கிங் படம் உருவாகியுள்ளது. பேரி ஜென்கின்ஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்.காட்டுக்கே ராஜாவான முபாசா கடந்து வந்த பாதையையும், அதன் சகோதரனான ஸ்காரையும் மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. தி லயன் கிங்’ திரைப்படம் வருகிற டிசம்பர் 20-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் திரைக்கு வரவுள்ளது.இதில், இந்தி பதிப்புக்கு ஷாருக்கான், அவரது மகன்களான ஆர்யன் கான், ஆப்ராம் கான் ஆகியோர் டப்பிங் பேசியிருக்கின்றனர். தெலுங்கில் முன்னணி நடிகர் மகேஷ் பாபு முபாசாவுக்கு குரல் கொடுத்துள்ளார்.தமிழ் மொழிக்கான டப்பிங்கை அர்ஜுன் தாஸ், அசோக் செல்வன், சிங்கம் புலி, ரோபோ சங்கர், விக்னேஷ், நாசர் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.
படத்திற்கான விளம்பர நிகழ்வில் நம்ரதா ஷிரோத்கர் கட்டமனேனி மற்றும் பலர் கலந்துக்கொண்டனர். அந்த நிகழ்வில் நடிகர் மகேஷ் பாபு முபாசா தி லயன் கிங்’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டார்.

 

Comments (0)
Add Comment