ரெட் லேபிள் – திரைப்பட விமர்சனம்

மாணவர்கள் படிக்கிற காலத்தில் அரசியல் புரிதல், நிர்வாக நடைமுறைகளை அனுபவ ரீதியாக கற்றுணர வேண்டும் என்பதற்காக பள்ளி, கல்லூரிகளில் மாணவர் பேரவை தேர்தல் சுதந்திர இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. காலப்போக்கில்  மாநிலத்தை ஆளும் கட்சிக்கு தலைவர்களை உருவாக்கும் களமாக மாணவர் பேரவை தேர்தல்கள் பயன்படுத்தப்பட்டது. ரெட்லேபில் திரைப்படமும் அந்த வகைமையிலான திரைப்படமாக எடுக்க முயற்சிக்கப்பட்டு திசைமாறி போயிருக்கிறது.

கல்லூரி மாணவராக இருக்கும்போது துடிப்புடன் இருந்து அதற்காக காவல்நிலையம், நீதிமன்றம் வரை சென்று சட்ட போராட்டம் நடத்தி வரும்நாயகன்,கல்லூரி வாழ்க்கைமுடிந்து சொந்த தொழிலில் கவனம் செலுத்துகிறார்.
ஆனால் அவர் படித்த கல்லூரி மாணவர் பேரவை தேர்தல் நேரத்தில் முன்னாள் மாணவர் பேரவை தலைவர் என்கிற அடிப்படையில் அவரது உதவியை மாணவர் நலன் கருதி கல்லூரி ஆசிரியர்கள் நாடுகின்றனர். விருப்பமில்லை என்றாலும் தவிர்க்க முடியாத சூழலில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. தேர்தல் மோதலை கடந்து தனிப்பட்ட சிக்கலில் நாயகன் லெனின் மாட்டிக் கொள்கிறார். அதில் இருந்து அவரும் அவரை சார்ந்தவர்களும் எப்படி வெளியில் வருகிறார்கள்என்பதுதான் படம்.

நாயகனாக நடித்திருக்கும் லெனின்அதைப் பொறுப்பாகச் செய்திருக்கிறார். கல்லூரி மாணவர்,  இளைஞர் ஆகிய இருவேறு தோற்றங்களிலும் அதற்கேற்ற வகையில் அறிமுகமாகும் முதல் படத்தில் நடிக்க முயற்சித்திருக்கிறார்.நாயகியாக நடித்திருக்கும் அஸ்மினுக்கு வழக்கமான கதாபாத்திரமில்லை.திரைக்கதை அவரை சுற்றியே இயங்குகிறது அதை உணர்ந்து நடித்திருக்கிறார்.

படத்தின் பிரதான வில்லனாக நடித்திருக்கிறார்இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்.முனீஷ்காந்த், அனுமோகன் ஆகிய இருவரும் படத்தில் வந்து போகிறார்கள்.

படம் பார்ப்பவர்களை எழாமல் இருக்கையில் இருக்கவைப்பதில் ஒளிப்பதிவாளர் சதீஷ் மெய்யப்பனின் பங்கு ஆதிக்கம் செலுத்துகிறது.

கைலாஷ் மேனன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.பின்னணி இசை மூலம் திரைக்கதை பரபரப்பாக இருக்க வைத்திருக்கிறார்.

படம் தொடக்கம் முதல் கடைசிவரை விறுவிறுப்பாகச் செல்லவேண்டும் என்கிற ஒற்றை நோக்கத்தில் உழைத்திருக்கிறார் படத்தின் தொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோர்.

திரைக்கதை எழுதியிருக்கும் பொன்.பார்த்திபன்,அகல உழுவதைவிட ஆழ உழுவதே மேல் என்பதற்கேற்ப எழுதியிருக்கிறார்.

கதைக்களம் ஒரு கல்லூரிதான் அங்கு நடக்கும் சம்பவங்களைபல்வேறு அடுக்குகளாக உருவாக்கிஅடுத்து என்னநடக்கும்? என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்த முயற்சித்திருக்கிறார் திரைக்கதை எழுதியிருக்கும் பொன். பார்த்திபன். அதற்கேற்ப விறுவிறுப்பை கூட்டும் வகையில், அறிமுக கதாநாயகன், குறைந்தபட்ச பட்ஜெட்டில் ஒரு முழுமையான படத்தை இயக்கியிருக்கின்றார்படத்தின் இயக்குநர் கே.ஆர்.வினோத்.

Comments (0)
Add Comment