வசனம் இல்லாமல் தயாரிகியுள்ள” உஃப்யே சியாபா” திரைப்படம்

லவ் ரஞ்சன் மற்றும் அங்கூர் கார்க் தயாரிப்பில்  பிரபல இயக்குனர்  ஜி. அசோக் இயக்கிய யுள்ள திரைப்படம் “உஃப் யே சியாபா”
இது ஒரு  நகைச்சுவை-த்ரில்லர் படம், எந்த வசனங்களும் இல்லாமல்
நகைச்சுவைகள் மற்றும் ஏ.ஆர். ரஹ்மானின் உற்சாகமான இசையை மட்டும் நம்பி எடுக்கப்பட்டிருக்கிறது.
ஒரு வசனம் கூட இல்லாமல் நடிகர்கள்  சோஹம் ஷா, நுஷ்ரத் பருச்சா, நோரா ஃபதேஹி, ஓம்கார் கபூர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
அதுவும் முழுக்க நகைச்சுவை படமாக வந்திருக்கிறது.
இந்த படத்திற்கு இசையையும், நடிகர்களின் வசனமில்லாத நடிப்பையும் மட்டும் நம்பி எடுத்திருக்கிறார்கள்.
 இந்த படம். இது குறித்து ரஹ்மான்கூறியது.
இந்தபடத்தில்  பணிபுரிவது சவாலானதாகவும், சுதந்திரமாகவும்   இருந்தது. பெரும்பாலான படங்களில், வசனங்கள் முன்னுரிமை பெறுகின்றன, இசை ஒரு படி பின்வாங்குகிறது, ஆனால் இங்கே, இசையே கதையின் ஒரு பகுதியாகும். இசை முக்கிய கதைசொல்லலை இயக்கும் இது போன்ற வாய்ப்புகள் அரிதானவை. புதிய  பாணிகளைப் பரிசோதிப்பதை நான் உண்மையிலேயே ரசித்தேன்,
 குறிப்பாக இந்த நகைச்சுவை-த்ரில்லர் வகை படமாக இருந்தது கூடுதல் சவாலாகவும் இருந்தது.
லவ் ரஞ்சன் மற்றும் இயக்குனர் அசோக்குடன் பணிபுரிவது மகிழ்ச்சியாக இருந்தது,
தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் அவர்களின் இந்த முயற்சி  வெற்றி பெரும் விதமாக அமைந்துள்ளது.
நவீன பாலிவுட்டில்  இதுபோன்ற படங்கள் வருவது அறிது
இது பல வருடங்களுக்குப்பிறகு இந்தியாவில் உருவாக்கும்  படம்.  கமல்ஹாசன் நடிப்பில் ஏற்கனவே  தமிழில் ஏற்கனவே இந்த முயற்சி செய்ப்பட்டிருந்தாலும் இந்த காலகட்டத்தில் இப்படி ஒரு முயற்சி இந்த தலைமுறையினருக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும்.
மொழி இல்லாத படமாக இருப்பதால் எல்லா மாநிலங்களிலும், எல்லா நாடுகளிலும் இந்த படத்தை தயக்கமின்றி வெளியிடுகிறோம் என்கிறார்கள் படக்குழுவினர்.
Comments (0)
Add Comment