தமிழ்–மலையாள திரைப்படமான ‘ஆனந்தன் காடு’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் இயக்குநர் ஜியேன் கிருஷ்ணகுமார் பேசியதாவது
“இது வெறும் ஆக்ஷன் திரைப்படம் மட்டுமல்ல; உணர்வுகள், மனிதர்களின் வாழ்க்கை மற்றும் பல அடுக்குகள் கொண்ட கதைக்களத்தை உள்ளடக்கிய திரைப்படம். சில வரலாற்றுப் பின்னணிகளை கொண்டிருந்தாலும், படம் எந்த சமூகத்தையோ அல்லது மக்களையோ புண்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படவில்லை” என்று தெரிவித்தார்.
நடிகர் ஆர்யா பேசுகையில்,
“இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான உழைப்பில் உருவான இந்த திரைப்படம் ஒரு மிகப்பெரிய முயற்சி. முரளி கோபியின் பல அடுக்குகள் கொண்ட திரைக்கதையை எந்த சமரசமும் இல்லாமல் திரையில் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் ஜியேன் கிருஷ்ணகுமார். தொழில்நுட்ப ரீதியாகவும், கதைக்கள ரீதியாகவும் இது மிகுந்த திருப்தி அளிக்கும் படைப்பாக இருக்கும்” என்று கூறினார்.
மேலும், படம் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் உருவாக்கப்பட்டிருப்பதாகவும், பார்வையாளர்கள் உணர்வுகளை முழுமையாக அனுபவிக்கும்படி தனித்துவமான வெளியீட்டு வடிவமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.படத்தில் நடித்துள்ள இந்திரன்ஸ், சுனில், விஜயராகவன், தேவமோகன், நிகிலா விமல் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பையும் அவர் பாராட்டினார்.
படத்தின் ஒளிப்பதிவு, சண்டைக் காட்சிகள், கலை அமைப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து பேசிய ஆர்யா, படக்குழுவின் அர்ப்பணிப்பை பாராட்டியதுடன், திரையரங்கில் இந்த திரைப்படம் ஒரு முழுமையான அனுபவத்தை வழங்கும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.
படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் இந்திரன்ஸ் தனது உரையில்,
“கருப்பு திரைப்படத்திற்கு முன்பே நான் நடித்த படம் ஆனந்தன் காடு. இதில் எனது திரைப்பயணத்தில் முக்கியமான மற்றும் சவாலான கதாபாத்திரம் ஒன்றை செய்திருக்கிறேன் என்றும். படம் வெளியான பிறகு ரசிகர்கள் அதை பாராட்டுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்று கூறினார்.
படத்தின் வெளியீடு குறித்து தயாரிப்பாளர் எஸ்.விநோத் குமார் பேசுகையில்,
தற்போதைய OTT சூழலிலும் ரசிகர்கள்திரையரங்கு அனுபவத்தின் மீது நம்பிக்கை வைத்து ‘ஆனந்தன் காடு’ திரைப்படத்தை உலகளவில் வெளியிடவுள்ளதாக தெரிவித்தார். மேலும், 60 கோடிக்கும் மேற்பட்ட பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் முழுமையாக ரசிகர்களின் ஆதரவை நம்பியே திரையரங்குகளில் வெளியாகிறது என்றும் குறிப்பிட்டார்.
தொழில்நுட்ப குழு:
இயக்கம்:ஜியன் கிருஷ்ணகுமார்
கதை, திரைக்கதை, வசனம்:
முரளி கோபி
தயாரிப்பு:
எஸ். வினோத் குமார்
ஒளிப்பதிவு:
எஸ். யுவா
படத்தொகுப்பு:
ரோஹித் வி.எஸ். வரியத்
இசை:
பி. அஜனீஷ் லோக்நாத்
கலை இயக்கம்:
ரஞ்சித் கோதேரி
நிர்வாகத் தயாரிப்பாளர்:
ஜெயின் பால்
சண்டைக் காட்சிகள்:
ஆர். சக்தி சரவணன்
விஎஃப்எக்ஸ் இயக்கம்:
பினோய் சதாசிவன்
தயாரிப்பு கட்டுப்பாட்டாளர்:
பிரணவ் மோகன்
ஒப்பனை:
பைஜு எஸ்
ஒலி வடிவமைப்பு:
அருண் எஸ். மணி
ஒலி கலவை
விஷ்ணு பி.சி
பாடல் வரிகள்:
பழனி பாரதி • முரளி கோபி
வண்ணச் சீரமைப்பு:
சிவசங்கர் வி. (B2H)
முதன்மை இணை இயக்குநர்:
அபில் ஆனந்த் எம்.டி
நிதி கட்டுப்பாட்டாளர்:
எம்.எஸ். அருண்
ஆடை வடிவமைப்பு:
அருண் மனோஹர்
ஸ்டில்ஸ் புகைப்படம்:
ரிஷ்லால் உண்ணிகிருஷ்ணன்
விளம்பர வடிவமைப்பு:
மா மி ஜோ