விஜய் சேதுபதி வெளியிட்ட லவ் ஓ லவ் முதல் பார்வை

காதல் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகி வரும் Love Oh Love திரைப்படத்தின்  ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய் சேதுபதி  வெளியிட்டார்.இந்த படத்தில் பவிஷ் நாராயணன் மற்றும் நாக துர்கா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒரு சிறப்பு மற்றும் நினைவாக இருக்கும் தருணமாக, படக்குழுவினர் விஜய் சேதுபதி அவர்களை, இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகும் அவரது புதிய திரைப்படமான ‘பாக்கெட் நாவல்’ படப்பிடிப்பு தளத்தில் சந்தித்தனர்.
அங்கு அவர் “லவ் ஓ லவ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு, முழு படக்குழுவிற்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த அன்பான செயல், படத்திற்கு கூடுதல் கவனத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்கியுள்ளார்.படத்தின் மற்ற முக்கிய அம்சமாக, பிரபல இயக்குநர்களான செல்வராகவன் மற்றும் K. S. ரவிக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் வனிதா விஜயகுமார் , ஆதித்யா கதிர் , ரம்யா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
 ஜோடி FOXn இசையமைக்கின்றனர். இதில் பிரதீப் PJ மற்றும் வேயின் பாவே ஆகியோர் இணைந்துள்ளனர். இவர்களின் தனித்துவமான மற்றும் பரிசோதனையான இசை பாணி, படத்திற்கு உணர்ச்சி மற்றும் இளமை நிறைந்த இசை அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒளிப்பதிவு P. G. முத்தையா
 Love Oh Love திரைப்படம் 2026 கோடை விடுமுறையில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
Comments (0)
Add Comment