வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் அதிகாரபூர்வ அறிவிப்பு

வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கவுள்ள படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 4 ஆம் தேதிஇயக்குநர் வெற்றிமாறன் பிறந்தநாள் இதனை முன்னிட்டு சிலம்பரசன் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி மாலை 6 மணியளவில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, தனது எக்ஸ் தளத்தில் இப்படம் குறித்த சிறிய வீடியோ பதிவின் மூலம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதனை சிலம்பரசன்தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து உறுதிப்படுத்தி இருக்கிறார். இந்தப் படத்தை ‘வி கிரியேஷன்ஸ்’ சார்பில் கலைப்புலிதாணு தயாரிக்கின்றார்.
சிலம்பரசன் நடிக்க இப்படத்தின் ப்ரோமோ வீடியோ ஒன்றை படமாக்கியுள்ளார் வெற்றிமாறன். அதனை முழுமையாக வெளியிடாமல் ஒரு சிறிய பகுதியை மட்டுமே வெளியிட்டுள்ளார்கள். இப்படத்தில் ‘வடசென்னை’ படத்தில் நடித்தவர்களில் தனுஷை தவிர பலர் முக்கிய கதாபாத்திரத்தில் சிலம்பரசன் உடன் நடிக்கவுள்ளதை வெற்றிமாறன் உறுதிப்படுத்தி இருக்கிறார். அது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை உறுதி செய்துள்ளது. இதன் படப்பிடிப்பு உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments (0)
Add Comment