“ரஜினிகாந்த் நடிப்பில், த.செ. ஞானவேல் இயக்கத்தில் அக்டோபர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது வேட்டையன். இந்த படத்தில் ரஜினிகாந்த்துடன், மஞ்சுவாரியார், பகத்பாசில், துஷாரா விஜயன், ராகுல் பீரீத்தி சிங் ஆகியோர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்துள்ள வேட்டையன் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. வேட்டையன் படம் பற்றி கலவையான விமர்சனங்கள் வெளியான போதும் ரஜினிகாந்த் திரைப்படத்திற்கு வழக்கமாக கிடைக்கும் வசூல் வேட்டையன் படத்திற்கு முதல் நான்கு நாட்கள் திரையரங்குகள் மூலம் கிடைத்துள்ளது. இதனை செய்தியாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் படக்குழுவின் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பேசிய இயக்குனர் த.செ. ஞானவேல், ‘ஜெயிலர்’ மாபெரும் வெற்றியை தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் படத்தில் நடிக்க துணிச்சல் வேண்டும். அந்த தைரியத்துடன் நடித்ததால் தான் அவர் சூப்பர் ஸ்டார் , என்று படத்தின் நாயகன் ரஜினிகாந்தை புகழ்ந்து பேசியவர் மேலும் பேசுகிற போது
‘வேட்டையன்’ குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியானது மிகவும் மகிழ்ச்சி. ரசிகர்களை தாண்டி குழந்தைகளுடன் குடும்பத்தோடு தியேட்டர் வந்து படத்தை பார்க்குறாங்க. இது நானே எதிர்பார்க்காத ஒன்று என்றார்.