‘ஹைக்கூ’ இயக்குநரின் நம்பிக்கை

ஏகன், ஸ்ரீதேவி, ஃபெமினா ஜார்ஜ் உள்​ளிட்ட பலர் நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹைக்கூ’. விஷன் சினிமா ஹவுஸ் சார்​பில் டாக்​டர் அருளானந்து மற்​றும் மேத்யூ அருளானந்து தயாரித்​துள்ள இப்​படம் அக்டோபர் 23 ஆம் தேதிவெளியானது.

யுவராஜ் சின்னசாமி இயக்​கி​யுள்​ள ஹைக்கூபடம் தென்​னிந்​தியா முழு​வதும் 450-க்​கும் மேற்​பட்ட திரையரங்கு​களில் வெளியாகி​யுள்​ளது.

படம் பற்றி இயக்​குநர் யுவ​ராஜ் சின்​னசாமி கூறும்​போது, “ஹைக்கூ’ படத்தை உரு​வாக்​கும்​போது, எல்லா வயதினரை​யும் கவரக்​கூடிய காதல் கதையைச் சொல்ல வேண்​டும் என்​பதே விருப்​பமாக இருந்​தது.  அனைவரை​யும் கவரும் காதல் கதைகள், ஒவ்​வொரு​வரும் தங்​களு​டன் தொடர்​புபடுத்​திக் கொள்​ளக்​கூடிய உணர்​வு​களைக் கொண்​டிருக்​கும். அப்​படித்​தான் இதை உரு​வாக்​கினேன். ஒரு பெண்​ணின் காதலைப் பெற முயற்​சிக்​கும் காதலன் என்ற

எல்​லைக்​குள் மட்​டும் ஏகன் கதாபாத்​திரம் நின்​று​விடுவதில்லை.

எதிர்​பாராத வித​மாக அவர் செய்​யும் செயல், அவரது வாழ்க்​கையையே மாற்​றுகிறது. பிறகு அவர் எதிர்​கொள்​ளும் உணர்​வுப் பூர்​வ​மான போராட்​டங்​கள் கதாபாத்​திரத்​துக்கு மற்​றொரு பரிமாணத்தை அளிக்​கின்​றன. ஏகன் கதாபாத்​திரத்​துடன் ரசிகர்​கள் தங்​களைப் பொருத்​திப் பார்ப்​பார்​கள் என்று நம்​பு​கிறேன்” என்​றார்.

 

Comments (0)
Add Comment