100 மில்லியன் கடந்த முதல் தமிழ் பாடல்

“யு-டியூப் வீடியோ தளம் 2005ம் ஆண்டுதான் ஆரம்பிக்கப்பட்டது.  இன்று உலகம் முழுவதும் பல கோடி மக்களால் அதிகம் பார்க்கப்படும் ஒரு வீடியோ தளமாக வளர்ச்சியடைந்திருக்கிறது.

யு டியுப் தளத்தில் லட்சக்கணக்காண தமிழ்ப் பாடல்கள், திரைப்படங்கள், காமெடிகாட்சிகள், படத்தின்டிரைலர்கள், டீசர்கள், பல தனி நபர் சேனல்கள் என தமிழ் சினிமா சார்ந்து ஆயிரக்கணக்கான சேனல்களில் பல லட்சம் வீடியோ பதிவுகள் இடம் பெற்றுள்ளன.

பழைய படங்கள் பலவும், பாடல்கள் பலவும் அதில் இடம் பெற்றுள்ளது. அவற்றிற்கென்று தனிப்பட்ட வரவேற்பு அதிகம் இருந்தாலும் அவை தற்போதைய படங்கள், பாடல்கள் போல பார்வைகளைப் பெறுவதில்லை.

இப்போது 80களில் வெளிவந்த ஒரு சினிமா பாடல் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. ஒரு பழைய பாடல் இத்தகைய சாதனையை நிகழ்த்துவது இதுவே முதல் முறை.

ராஜசேகர் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், ரஜினிகாந்த், அம்பிகா மற்றும் பலர் நடிப்பில் 1985ம் ஆண்டு வெளிவந்த படம் ‘படிக்காதவன்’. அப்படத்தில் வைரமுத்து எழுதி யேசுதாஸ் பாடிய ‘ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்’ பாடல்தான் அந்த 100 மில்லியன் சாதனையைப் படைத்துள்ளது.

அப்பாடல் பல யு டியூப் சேனல்களில் பதிவேற்றப்பட்டிருந்தாலும் தமிழ் சினிமா என்ற சேனலில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.”

Comments (0)
Add Comment