29 நாட்களில் தயாரான ஜென்ம நட்சத்திரம்

ஒரு நொடி’ படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து அதே அணியினர் ’ஜென்ம நட்சத்திரம்’ படத்திற்காக ஒன்றிணைந்துள்ளனர். ஹாரர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப்படம் ‘ஓமன்’ படத்தின் தமிழ்ப் பதிப்பு.

இந்தப் படத்தை மணிவர்மன் இயக்கியுள்ளார்.அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் வைட்லேம்ப் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிடும் இந்தப்படம் ஜூலை 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 8 அன்று சென்னையில்நடைபெற்றது நிகழ்வில்அமோகம் ஸ்டுடியோஸ் விஜயன் பேசியதாவது….

எங்கள் தயாரிப்பு நிர்வாகத்தின் முதல் படம் இது.’ஒரு நொடி’ படத்தின் பிரிவியூ ஷோவில் இருந்துதான் இந்தப்படம் தொடங்கியது. அந்த அணி மீது எங்களுக்கு நம்பிக்கை வந்தது.அவர்களை வைத்துத்தான் ‘ஜென்ம நட்சத்திரம்’ படம் தயாரித்தோம்.படம் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்.படம் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள் என்றார்.

இயக்குநர் மணிவர்மன் பேசியதாவது….

’ஒரு நொடி’ படம் பார்த்த பிறகு விஜயன் சார்தான் ‘ஜென்ம நட்சத்திரம்’ படத்திற்கான வாய்ப்பு கொடுத்தார். பல சவாலான அனுபவங்கள் இந்தப்படத்தில் எங்களுக்குக் கிடைத்தது. 29 இரவுகள் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறோம். பட சமயத்தின்போது எனது ஒளிப்பதிவாளர் கேஜி டைபாய்டால் பாதிக்கப்பட்டார். காலையில் மருத்துவமனை கவனிப்பில் மருந்துகள் எடுத்துக் கொண்டு இரவு படப்பிடிப்பிற்காக வந்தார். நான் நினைத்ததை திரையில் கொண்டுவரக் காரணமாக இருந்த எனது குழுவினருக்கு நன்றி. ‘ஜென்ம நட்சத்திரம்’ திரைப்படம் ஜூலை 18 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. நிச்சயம் உங்கள் ஆதரவு தேவை
இவ்வாறு அவர் பேசினார்.

Comments (0)
Add Comment