இந்தி படத்தில் நடிக்க போகும் அஜீத்

அஜீத்குமார் மறைந்த நடிகை ஸ்ரீதேவி உயிருடன் இருந்தபோது அவருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றும் வகையில் அவரது மறைவுக்கு பின் நேர்கொண்டபார்வை படத்தில் நடித்தார் இந்த படத்தை  நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்தார்
வியாபாரம், வசூல் ரீதியாக மினிமம் கேரண்டி வெற்றியை பெற்ற படம் நேர்கொண்ட பார்வை

மீண்டும் அஜீத் குமார் நடிக்கும்  வலிமை படத்தை போனிகபூர்தயாரித்துவருகிறார் 30% படப்பிடிப்புகளே முடிந்துள்ள நிலையில் கொரானா வைரஸ் பிரச்சினை காரணமாக படப்பிடிப்பு தடைபட்டுள்ளது மேலும் பண பிரச்சினையால் இப்படத்தை மீண்டும் தொடங்குவதில் அஜீத்துக்கும் போனிகபூருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது அதன் காரணமாகவும் அப்படம் தடைபட்டிருப்பதாக  சொல்லப்படுகிறது.

இந்தநேரத்தில் திரையுலகில் வலம் செய்தி வேறாக இருக்கிறது.

அஜீத் 1999ஆம் வருடம் இருவேடங்களில் நடித்து  ஆண்டு வெளியான படம் வாலி. எஸ்.ஜே.சூர்யா இயக்கிய இந்தப்படம் மிகப்பெரும்
வெற்றியைப் பெற்றது. அஜீத்தின் வியாபாரம், சம்பளம் உயர அந்தப்படம் காரணமாக இருந்தது.

இப்போது அந்தப்படத்தை இந்தியில் மொழிமாற்று செய்யும் உரிமையை போனிகபூர் வாங்கியிருக்கிறார். இந்த இந்தி மொழிமாற்றில் அஜீத்தே நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாாகியுள்ளது

ஏற்கெனவெ 2019 ஜூலை 10 அன்று போனிகபூர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், அஜித்குமாரை வைத்து 3 படங்களை தயாரிக்க நான் ஒப்பந்தம் செய்து இருப்பதாகத் தகவல் பரவி வருகிறது. அதில் உண்மை இல்லை. நேர்கொண்ட பார்வை படத்துக்குப் பிறகு ஒரு அதிரடிப் படத்தை எடுக்க ஏற்பாடுகள் நடக்கிறது. அஜித்குமார் ஒரு இந்திப் படத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அது இன்னும் முடிவாகவில்லை என்று சொல்லியிருந்தார். இப்போது அவர் வாலி படத்தின் இந்தி மொழிமாற்று உரிமையை வாங்கியிருப்பதால் அஜீத் இந்தியில் நடிக்கவிருக்கிறார் என்று உறுதியாக போனி கபூர் வட்டாரத்தில் கூறுகின்றனர். இந்தியில் இந்த படத்தையும் தமிழ் வாலியை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா இயக்க வேண்டும் என அஜீத்குமார் விரும்புவதாக அஜீத் வட்டார தகவல்

#boneykapoor#hvinoth#sjsurya#thala#yuvanshankarrajaajithkumarValimai
Comments (0)
Add Comment