சிலம்பரசன் ஆசையை நிறைவேற்ற காத்திருக்கும் கவுதம்மேனன்

கவுதம் வாசுதேவ்மேனன் இயக்கத்தில் சிம்பு,த்ரிஷா

நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படம் 2010 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது.
அதன் இரண்டாம்பாகம் தயாராகவிருக்கிறது என்று பல ஆண்டுகளாகவே கூறப்பட்டுவந்தது. ஆனால் நடக்கவில்லை.
இவ்வாண்டு கொரானா காரணமாக எல்லோரும் வீட்டுக்குள்ளேயே இருந்த நேரத்தில்,கவுதம் வாசுதேவ் மேனன் சிம்பு கூட்டணியில், கார்த்திக் டயல் செய்த எண் என்கிற பெயரில் 12 நிமிட குறும்படம் வெளியானது.இது விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம்பாகத்துக்கான முன்னோட்டம் போல் இருப்பதாக அனைவரும் சொன்னார்கள்.
இந்நிலையில், கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் புதிய படத்துக்கான வேலைகள் தொடங்கியிருக்கிறதாம்.
ஐசரிகணேஷ் தயாரிப்பில் உருவாகவிருக்கும் அந்தப்படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு என்றும் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடது கொண்டிருக்கிறதாம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்கிறார்கள்.
இப்படத்தில் குறிப்பிடத்தக்க விசயம் ஒன்று நடந்திருக்கிறது. அது என்னவென்றால்? , பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவில் நடிக்க வேண்டும் என்பது சிம்புவின் நீண்டநாள் ஆசையாம். அதை இப்படம் மூலம் கவுதம்வாசுதேவ்மேனன்நிறைவேற்றவிருக்கிறார்
#gauthamvasudevmenon#gvm#silambarasan
Comments (0)
Add Comment