இசையமைப்பாளர்களில் கதாநாயன் அவதாரம் தரித்தG.V.பிரகாஷ் அதிகப்படங்களில் நடித்திருந்தாலும் வணிகரீதியான வெற்றி என்பது அவருக்கு இன்றுவரை வசப்படவில்லை
அவர் இப்போது, சிவகுமாரின் சபதம் அன்பறிவு ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
‘சிவகுமாரின் சபதம்’ படத்தில் ஆதி நடிப்பதோடு மட்டுமில்லாமல் இயக்கியும் வருகிறார்.இந்தப் படத்திற்கு இசையமைக்கவும் செய்கிறார். மீசைய முறுக்கு படத்திற்குப் பிறகு ஆதி இயக்கும் படம் இது. இதில் ஆதிக்கு ஜோடியாக மாதுரி நடிக்கிறார்.
அஸ்வின்ராம் என்பவர் இயக்கத்தில் உருவாகும் அன்பறிவு படத்தில் ஹிப் ஹாப் ஆதியுடன், நெப்போலியன், விதார்த், காஷ்மீரா, சாய்குமார், ஊர்வதி, சங்கீதா க்ரிஷ், தீனா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.ஒளிப்பதிவாளராக மாதேஷ் மாணிக்கம், படத்தொகுப்பாளராக ப்ரதீப் ராகவ் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
இவ்விரு படங்களும் இறுதிக்கட்ட பணிகளில் இருக்கின்றனஇவற்றில் சிவகுமாரின் சபதம் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. அன்பறிவு படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்திருகிறது.
இந்நிலையில், இப்படங்களுக்கு பின் ஆதியே இயக்கி நடிக்கும் படம் குறித்த பேச்சுகள் நடந்துவந்தன.அப்படத்தை ம சத்யம் சினிமாஸ் நிறுவனத்தினர் தயாரிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியானது சம்பளம், பட்ஜெட் காரணங்களால் அந்தப்பட தயாரிப்பு முடிவுக்கு வரவில்லைஎனவே ஹிப்ஹாப் ஆதியின் அடுத்த படத்தையும் சத்யஜோதி நிறுவனமே தயாரிக்கவிருக்கிறது. மரகதநாணயம் பட த்தை இயக்கியஇயக்குநர் சரவண், ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் புதிய படத்தை இயக்கவிருப்பதாக தகவல்கள்வெளியாகியுள்ளது