மதுக்கடை திறப்புக்கு எதிராக மெளனம் கலைத்த ரஜினிகாந்த்

இந்தியா முழுவதும் மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலானபோது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதில் மதுக்கடைகளைத் திறக்கலாம் என்கிற அறிவிப்பும் ஒன்று. இதையடுத்து பல மாநிலங்கள் மதுக்கடைகளைத் திறந்தன. தமிழகத்திலும் மே 7 ஆம் தேதி அன்று மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

மதுக்கடைகள் திறக்கப்பட்டால் சமூக விலகல் கேள்விக்குறியாகும், ஒருபுறம் நோய் எதிர்ப்புசக்தியை அதிகாரிக்க அறிவுறுத்தும் அரசு, நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் மதுபானங்களை விற்பனை செய்யும் கடைகளை திறப்பது சரியல்ல என

உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மதுக்கடைகள் திறக்கும் அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது எனத் தீர்ப்பளித்தது.
மற்றொரு வழக்கில் தீர்ப்பளித்த
உயர் நீதிமன்றம் தனி நபர் இடைவெளி, ஆதார் கார்டு, இரசீது வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது.நிபந்தனை மீறப்பட்டால் கடைகளை முடநேரிடும் என எச்சரித்திருந்தது.

இந்நிலையில் இரண்டு நாட்களில் குடிகாரர்கள் சில இடங்களில்நீண்ட வரிசையில் காத்திருந்து பல இடங்களில் முண்டியடித்து ரூ.294.5 கோடிக்கு மதுவகைகளை வாங்கினர். குற்றச்சம்பவங்கள் அதிகரித்தன. சமூக விலகலின்றி கும்பல் கும்பலாகக் கூடி மதுபானங்களை வாங்கினர்.

இதுகுறித்த பொதுநல வழக்கை சிலர் தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த வினீத் கோத்தாரி அமர்வு, மே 17 ஆம் தேதி வரை மதுக்கடைகளைத் திறக்கத் தடை விதித்தும் திறக்கப்பட்ட மதுக்கடைகளை மூடும்படியும் உத்தரவிட்டது.

இந்நிலையில் மதுக்கடைகளை மூடும் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில், இன்று காலை இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்துத் தெரிவித்துள்ளார். அவர், இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து கஜானாவை நிரப்ப நல்ல வழிகளைப் பாருங்கள்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

RajinikhanthTasmac Re-open
Comments (0)
Add Comment