அஜீத்தின் வலிமைக்கு போட்டியாக விஷாலின் எனிமி

தமிழ் சினிமாவில் மூர்க்கத்தனமான ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ள அஜீத்குமார் நடிப்பில் வெளியாகவுள்ள வலிமை படத்துடன் நேரடி மோதலுக்குவிஷாலின் நடிப்பில் உருவாகியுள்ள ‘எனிமி’படம் களமிறங்குவதை விஷால் உறுதிசெய்துள்ளார்

எனிமிபடத்தில் ஆர்யா, விஷாலுக்கு வில்லனாக நடித்திருக்கிறார். மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ் இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். ஆனந்த் சங்கர் இயக்கியிருக்கிறார்.  ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து இறுதிக் கட்டப்பணிகள்  நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தின் வெளியீட்டு தேதியை விஷால் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார். இதன்படி இந்தப் படம் அக்டோபர்மாதம் 14-ம் தேதி வெளியாகிறது.

இதே நாளில்தான் அஜீத்தின் ‘வலிமை’ திரைப்படமும் வெளியாகவிருக்கிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் 2021 தீபாவளிக்கு ‘அண்ணாத்த’ படம் வெளியாக இருக்கிறது. அடுத்து 2022 பொங்கல் தினத்தன்று ‘பீஸ்ட்’ படம் வெளியாகவுள்ளது.

அதனால் நேரடி மோதலை தவிர்த்துஅதற்கு முன்னதாக விடுமுறை தினங்கள் உள்ள நேரத்தில் ‘வலிமை’ படம் வெளியிட்டால் மட்டுமே முழுமையான தியேட்டர் வசூலை பெறமுடியும். இதனால் ‘வலிமை’ நவராத்தி விடுமுறையில் வருவதை இரண்டு மாதங்களுக்கு முன்னதாக படக் குழு சூசகமாக கூறியிருந்தது.

இப்போது இவர்களையும் முந்திக் கொண்டு விஷால் தனது படத்தை அறிவித்துவிட்டார். ஆக, விஷாலும், அஜீத்தும் ஒரே நாளில் மோதுவது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கப்போகிறது.

#vishal
Comments (0)
Add Comment