கார்த்தி நடித்துள்ள சுல்த்தான் ரீலீஸ் எப்போது?

சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ திரைப்படத்தின் இயக்குநரான பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் படம் ‘சுல்தான்’.

இந்தப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருக்கிறார்.

படப்பிடிப்பு மற்றும் அதற்குப் பிறகான பணிகள் நிறைவடைந்து விரைவில் படம் தயாராகிவிடும் என்கிறார்கள். இந்நிலையில் சுல்தான் திரைப்படத்தை நேரடியாக இணையதளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகச் சொல்லப்பட்டது.

ஏப்ரல் 14 ஆம் தேதி சித்திரைத் திருநாளை முன்னிட்டு இந்தப்படம் இணையதளத்தில் வெளியாகும் என்றும் செய்திகள் வந்தன.
இந்நிலையில், இப்படம் இணையதளத்தில் வெளியாகாது திரையரங்குகளில்தான் வெளியாகும் என்று இப்போது சொல்லப்படுகிறது.

படத்தைத் திரையரங்குகளில் வெளியிடுவதற்கான வேலைகளை தயாரிப்பாளர் முன்னெடுத்திருப்பதாகவும் ஏப்ரல் 2 ஆம் தேதி புனிதவெள்ளி நாளில் இப்படம் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.

#bakiyarajkannan#sultanKarthi
Comments (0)
Add Comment