கொரோனா தொற்று அதிகரித்ததை தொடர்ந்து நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன்படி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கோவில்கள், தியேட்டர்கள், மால்கள் உட்பட பல்வேறு இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டன.
இந்த நிலையில் தற்போது தொற்று பாதிப்புகள் குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா காரணமாக 50 சதவிகித இருக்கைகளுடன் மட்டுமே தியேட்டர்களை திறக்க தமிழ்நாடு, ஆந்திரா உட்பட பல்வேறு மாநில அரசுகள் அனுமதித்திருக்கின்றன.
ஊரடங்கைதளர்த்துவதன் ஒரு பகுதியாக தற்போது 50 சதவிகித இருக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் நவம்பர் முதல் தேதியிலிருந்து 100% இருக்கைக்கு அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.