அக்டோபர் 25 ,2019அன்று வெளியான படம் பிகில். அட்லி இயக்கத்தில் விஜய் மற்றும் நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்ஏ ஏஜி.எஸ்.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயார்த்திருந்தது அதன் பின் தமிழ் சினிமாவில் காஸ்ட்லி, கதை திருட்டில் சிக்கும் இயக்குநராக அறியப்பட்ட இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் ஆர்வம் காட்டவில்லை இதனால் இந்தி திறப்பட துறை பக்கம் தன் கவனத்தை திருப்பினார் அவர் வலையில் சிக்கிய நடிகர்இந்தியில் பெரிய நடிகராக இருக்கும் ஷாருக்கான் அவர் நாயகனாக நடிக்கும் இந்திப்படத்தை இயக்க ஒப்பந்தமாகியிருக்கிறாரஇதற்கான முன் தயாரிப்புப் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன.
இந்தப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நயன்தாரா நடிக்கவிருக்கிறார். இப்படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். முத்துராஜ் கலை இயக்கத்தைக் கவனிக்கிறார்.
இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால், அதில் மாற்றம் நடந்திருக்கிறது.
இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறாராம். படத்தின் அறிவிப்புக்காக ஒரு குறுமுன்னோட்டம் (டீசர்) தயாரிக்கப்பட்டிருக்கிறதாம். அதற்கு அனிருத் இசையமைத்திருக்கிறாராம்.
அதைப்பார்த்த ஷாருக்கான், சிறப்பாக இருக்கிறது என்று மகிழ்ச்சியுடன் சொல்லியிருக்கிறார். இதனால் அட்லி உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவும் உற்சாகமாக இருக்கிறதாம்.
ஒரு இந்திப்படத்தில் ஒட்டுமொத்தமாக தமிழ்க்கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றுவதும் குறிப்பிடத்தக்க செய்தி என்கிறார்கள்.