விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் மட்டுமின்றி பிற மொழி படங்களிலும் பிஸியாக இருக்கும் விஜய் சேதுபதி, பொன்ராம் இயக்கத்தில் உருவாகும் படத்துக்காக தேதிகள் ஒதுக்கியுள்ளார். லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், துக்ளக் தர்பார் உள்ளிட்ட படங்களை முடித்த கையோடு விஜய் சேதுபதி, சன் டிவியில் குக்கிங் நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்க ஒப்புக் கொண்டதாக கடந்த இரண்டு நாட்களாக தகவல்கள் வலம் வருகின்றன. இந்நிலையில் பொன்ராம் இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த படத்துக்கு ஒளிப்பதிவாளராக தினேஷ் கிருஷ்ணன் பணிபுரிய உள்ளார். இமான் இசையமைக்கிறார். எடிட்டராக விவேக் ஹர்ஷன் பணிபுரிய உள்ளார்.
இந்தப் படத்தின் ப்ரோமோ வீடியோவின் மூலம், இதில் விஜய் சேதுபதி காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளார் என்பது தெரிகிறது. சேதுபதி படத்தில் காவல்துறை அதிகாரியாக கெத்துக் காட்டியிருந்தார். மீண்டும் போலீஸாக நடிக்கிறார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா மற்றும் சசிகுமார் நடிப்பில் எம்ஜிஆர் மகன் வெளியாக இருக்கும் நிலையில் பொன்ராம் இயக்கும் நான்காவது படமிது. அதோடு, விஜய்சேதுபதி நடிக்கும் 46வது படம்.
மாஸ்டர் பட நாயகர்களான விஜய் & விஜய்சேதுபதிக்கு ஒரு பக்கம் ‘விஜய் 65’ தயாரித்துவரும் சன் பிக்சர்ஸ் இன்னொரு பக்கம் ‘சேதுபதி 46’ தயாரிக்கிறது.
கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில்