அசுரத்தனமான வசூலில் அசுரன்

கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வேல்ராஜ் ஒளிப்பதிவில் ஜீ.வி. பிரகாஷ் இசையில் தனுஷ், மஞ்சுவாரியார், பிரகாஷ்ராஜ் ,பசுபதி, கென் கருணாஸ், ஆடுகளம் நரேன், இயக்குனர் சுப்பிரமணிய சிவா நடித்திருக்கும் திரைப்படம் அசுரன்.

அடிமை இந்தியாவில் நிலவிவந்த ஆண்டான் அடிமை அடக்கு முறை சுதந்திர இந்தியாவிலும் தொடர்கதையாக இருந்ததுஇதன் திரை வடிவமாக வந்திருக்கும் படம் தான் அசுரன்

வழக்கமாக தனுஷ் நடித்துள்ள படமாக இதனை கடந்து செல்ல முடியாத வகையில் படம் பற்றிய செய்திகளை, விமர்சனங்களை, மக்கள் மத்தியில் உடனுக்குடன் சென்றடைந்ததால் அசுரன் படத்தின் வசூல் அசுரத்தனமாக கடந்த மூன்று நாட்களாக இருந்தது என்கின்றனர் படத்தை திரையிட திரையரங்கு உரிமையாளர்கள்
இனியும் அது தொடரும் என்கிறது விநியோகஸ்தர்கள்வட்டாரம்.

பொதுவாக ஆண்டான் அடிமை மேல்ஜாதி கீழ்ஜாதிக்கு இடையே நடைபெறும் மோதல்களை பின்னணியாக கொண்டு தயாரிக்கப்படும் திரைப்படங்கள் எதிர்மறையான விமர்சனங்களை சந்திக்கும்

ஆனால் அசுரன் திரைப்படம் அடித்தட்டு பார்வையாளன் முதல் சினிமா விமர்சகர்கள் வரை ஒரே மாதிரியான பாராட்டை பெற்றுள்ளது.

படைப்பு ரீதியாக அசுரன் பாராட்டுக்கு உரியதாக இருந்தாலும் அதனை உரிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்தது பெரும் வெற்றி பெற உதவிகரமாக இருந்தது என்கின்றனர் பத்திரிக்கையாளர்கள்

ஒரு திரைப்படத்தை தயாரிப்பதற்கு எடுக்கும் முயற்சிக்கு இணையாக அதனை ஊடகங்கள் வாயிலாக கொண்டு செல்லும் முயற்சியை தயாரிப்பாளர்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது

எல்லாதயாரிப்பாளர்களும் இதனை கடைபிடிக்காததால் தரமான படங்கள் கூட வணிக ரீதியாக தோல்வியை சந்திக்க வேண்டியிருக்கிறது என்கின்றனர் தயாரிப்பாளர்கள்.

காப்பான், நம்ம வீட்டுப் பிள்ளை சைரா நரசிம்ம ரெட்டி, ஆகிய படங்கள் தமிழகத்தில் பெரும்பான்மையான திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருந்ததால் அசுரன் படத்திற்கு குறைவான திரையரங்குகள் கிடைத்தன சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களில் மட்டும்முதல்தரமான திரையரங்குகளில் அசுரன் திரையிடப்பட்டது

பிற இடங்களில் இரண்டாம்தர மூன்றாம்தர நிலையிலுள்ள தியேட்டர்கள் தான் இப்படத்திற்கு கிடைத்தது. கடந்த மூன்று நாட்களில் தமிழகத்தில் திரையரங்குகள் மூலம் சுமார் 18 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்துள்ளது அசுரன் திரைப்படம்

அதிகமானதிரையரங்குகளில் படம் வெளியிடப்பட்டு வசூலாகும் தொகை குறைவான திரையரங்குகளில் வெளியிடப்பட்டு தற்போது வசூலாகி உள்ளது என்கின்றனர் திரையரங்கு வட்டாரத்தில்.