விஸ்வாசம் படத்திற்கு விருது

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியையும் அனைத்து தரப்பினருக்கும் திருப்திகரமான லாபத்தையும் கொடுத்த திரைப்படம் விஸ்வாசம்.

சிறுத்தை சிவா இயக்க சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் அனைத்துமே பட்டய கிளப்பின.

குறிப்பாக கண்ணான கண்ணே பாடல் அனைத்து பெண்களை பெற்ற அனைத்து அப்பாக்களுக்கும் பேவரைட் பாடலாகி விட்டது

இந்நிலையில் தற்போது இப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது ( Provoke Awards ) கிடைத்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். டி. இமானுக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.