கொரானா நோய்தொற்றால் பாதிக்கப்பட்ட ரெட்டைச் சுழி, ஆண் தேவதை படங்களின் இயக்குனர் தாமிரா@சேக்தாவூத்(53) இன்று காலை சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் காலமானர் இயக்குனர் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குனராக தொழில் கற்ற தாமிரா பின்னர் அவரையும், பாரதிராஜாவையும் இணைந்து நடிக்க வைத்து ரெட்டை சுழி படத்தை இயக்கினார்
இயக்குனர் சமுத்திரகனியுடன்
Related Posts
பாலசந்தர் குருகுலத்தில் இணைந்து பணியாற்றியவர் என்பதால் அவர் நடித்த ஆண் தேவதை படத்தையும்
2018 ல் இயக்கினார்
ஜெமினி நிறுவனத்துக்காக படம் இயக்க கதை தயாரிப்பில் ஈடுபட்டிருந்த போது கொரானா வால் பாதிக்கப்பட்டிருக்கிறார் தாமிரா இருவாரங்களுக்கு முன்பு சென்னை அசோக் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டா ர் குணமாகி வருவார் என திரையுலகினர் எதிர்பார்த்து காத்திருந்தவேளையில் இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிர் பிரிந்திருக்கிறது திருநெல்வேலி பூர்விகமாக கொண்ட தாமிராவுக்கு மூன்று மகன்கள் ஒரு மகள் முகநூல் பக்கத்தில் சுவாரசியமான பதிவுகளை பதிவிட்டு வந்ததாமிரா மருத்துவமனையில் இருந்த நிலையில் ஏப்ரல் 11 அன்று” இந்த உலகை வெல்ல அன்பைத் தவிர வேறு சூட்சுமம் இல்லை என்னுள் இருக்கும் தீராக் கோபங்களை இன்றோடு விட்டொழிக்கின்றேன் இனி யாரோடும் பகை முரண் இல்லை யாவரும் கேளிர்” என பதிவிட்டதாமிரா மீண்டு வராமல் காற்றோடு கரைந்துபோனது திரையுலகினர் மத்தியில் கனத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது