விஜய் ஆண்டனி இயக்கும் பிச்சைகாரன் – 2

சசி இயக்கத்தில் 2016 ஆம் வருடம்விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான படம் ‘பிச்சைக்காரன்’. விஜய் ஆண்டனியே தயாரித்து, இசையமைத்திருந்தார். சாட்னா டைட்டஸ், பகவதி பெருமாள், முத்துராமன், தீபா ராமானுஜம் உள்ளிட்ட பலர் விஜய் ஆண்டனியுடன் நடித்தனர்.

இந்தப் படம்  தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் முதலீட்டை போன்று இரு மடங்கு லாபத்தை பெற்று தந்தது அதன் பின்னர் விஜய்ஆண்டனி தமிழ் சினிமாவில் வசூல் முக்கியத்துவமுள்ள நடிகராக கருதப்பட்டார் ஆனால் பிச்சைகாரன் படம் போன்ற வெற்றிலை அடுத்து வந்த ஆண்டுகளில் விஜய்ஆண்டனி நடித்து வெளியான படங்கள் பெற்று தரவில்லை

இந்நிலையில்,கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கில் பிச்சைக்காரன்- 2படத்துக்கான கதை, திரைக்கதையை விஜய் ஆண்டனியே எழுதியுள்ளார்.அந்தப் படத்தை தேசிய விருது வென்ற ‘பாரம்’ படத்தின் இயக்குநர் ப்ரியா கிருஷ்ணசாமி இயக்கவுள்ளார் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.அதன்பின்,இவ்வாண்டு மார்ச் மாதத்தில் கோடியில் ஒருவன் படத்துக்காக செய்தியாளர்களைச் சந்தித்த விஜய் ஆண்டனி, இப்படத்தின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் மிகச் சிறப்பாகப் படத்தை எடுத்துள்ளார். அதனாலேயே என்னுடைய – 2 படத்துக்கும் இவரையே இயக்குநராகத் தேர்வு செய்துள்ளேன் என்று கூறினார்.

இதனால் ப்ரியா கிருஷ்ணசாமி நீக்கப்பட்டு ஆனந்த கிருஷ்ணன் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது

அதன்பின், பல மாதங்கள் கழித்து இன்று (ஜூலை 24,2021) காலை 11 மணிக்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பிச்சைக்காரன் -2 படத்தை தமிழ் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் விஜய் ஆண்டனியே இயக்கவுள்ளார் என்று அறிவித்திருக்கிறார்

இது சம்பந்தமாக விஜய் ஆண்டனி கூறி இருப்பதா இந்த புதிய அவதாரம் பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது.  நீண்ட காலமாக எனது மனதில் இயக்குநர் ஆகும் ஆசை இருந்தது. ஒரு நடிகராக ஒவ்வொரு திரைப்படத்திலும், நான் உதவி இயக்குநராகவும்  பணியாற்றியுள்ளேன்,
பல்வேறு திரைப்பட இயக்குநர்களிடமிருந்து பல நுட்பங்களையும், திறன்களையும் கற்றுக் கொண்டிருக்கிறேன். எந்தவொரு படைப்பாளிக்கும், தான் பணிபுரியும்  துறை பற்றிய விழிப்புணர்வு இருப்பது  நன்மை தரும் அம்சமாகும்.   இசையமைப்பாளராகவும் ஒரு நடிகராகவும் இத்துறையில் சிறந்ததொரு  வெற்றியைப் பெற்றிருப்பது எனது அதிர்ஷ்டம். எனது திறமைகளை வளர்த்துக் கொள்ளும், இந்த திரைப்பயணத்தில், என்னை ஆதரித்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுக்கு நான்  இந்நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன்.
எனது பிறந்தநாளான இன்றுபிச்சைக்கரன் -2  திரைப்படத்தில், இயக்குநராக எனது புதிய பயணம்   துவங்குவது மகிழ்ச்சிகரமான ஒன்றாகும் இப்படத்தில் நாயகி பாத்திரத்தில் நடிக்க, முன்னணி நடிகைகளுடன்  பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.  ரசிகர்களுக்கு செண்டிமென்டும்,  பொழுதுபோக்கும்,  சரி விகிதத்தில் கலந்த சிறப்பானதொரு அனுபவத்தை “பிச்சைக்கரன் 2” திரைப்படம் தரும். இப்படத்தில்   நடிக்கவுள்ள  நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்கள் என்றார்.