பிரபு, நயன்தாரா, ஜோதிகா, வடிவேல், நாசர் என கச்சிதமான குடும்ப டிராமாவாக படமும் செம ஹிட். வித்யாசாகர் இசையில் வெளியான இந்தப் படத்தை, சிவாஜி புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்திருந்தது. பெரிய வெற்றியைக் கொடுத்த படங்களின் இரண்டாம் பாகம் எடுக்கும் டிரெண்ட் தற்பொழுது தமிழ் சினிமாவில் இருக்கிறது. அப்படி, ‘சந்திரமுகி 2’ படம் தயாரிப்பதற்கான பேச்சுவார்த்தையும் அவ்வப்போது செய்தியாகப் பரவும்.
தொடர்ந்து, கடந்த ஏப்ரலில் தான் சந்திரமுகி 2 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார் ராகவா லாரன்ஸ். அதன்படி, படத்தில் நாயகனாக ராகவா நடிப்பதும், பி.வாசு இயக்குவதும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதும் உறுதியானது.
அதன்பிறகு, நாயகி வேட்டையைத் துவங்கினார்கள் படக்குழுவினர். அந்த நேரத்தில் பல நடிகைகளின் பெயர்களும் அடிபட்டது. சந்திரமுகி படத்தில் நடித்த ஜோதிகா, இரண்டாம் பாகத்திலும் இருக்கிறார் என்று தகவல்கள் வெளியானது. அதோடு, சிம்ரன், கியாரா அத்வானி உள்ளிட்ட நடிகைகளும் நடிக்க இருக்கிறார்கள் என்றும் தகவல்கள் பரவியது.
இப்போது, சந்திரமுகி 2 படத்துக்கான முதல்கட்ட பணிகள் தொடங்கியிருக்கிறது. சந்திரமுகி படத்தைத் தயாரித்த சிவாஜி புரொடக்ஷன் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து டைட்டில் உரிமையை சமீபத்தில் வாங்கியிருக்கிறது படக்குழு. அதுமட்டுமல்ல, டைட்டிலுக்காக கொடுக்கப்பட்ட தொகை தான் இங்கு பரபரப்பாகியுள்ளது
சன்பிக்சர்ஸ் நிறுவனம் ‘சந்திரமுகி’ எனும் டைட்டிலுக்காக 1 கோடி ரூபாய் கொடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. படத்தின் தலைப்பு உரிமைக்காக இவ்வளவு பெரிய தொகை என்பது, தமிழ் திரையுலக வரலாற்றில் இதுவே முதல்முறை.
|