தெலுங்கு நடிகர்சிரஞ்சீவி ஒரு ஃபேண்டஸி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார், அதை தனது பிம்பிசாரா திரைப்படம் மூலம் தெலுங்கு சினிமா ரசிகர்களை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் சென்ற இயக்குநர் வசிஷ்டா இந்த புதிய திரைப்படத்தை இயக்குகிறார். UV கிரியேஷன்ஸின் பேனரின் கீழ் வி வம்சி கிருஷ்ணா ரெட்டி, பிரமோத் உப்பளபதி மற்றும் விக்ரம் ரெட்டி ஆகியோர் தயாரிக்கும் #Mega157 திரைப்படம், சிரஞ்சீவியின் கேரியரில் மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகும் படமாக இருக்கும் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்..
சிரஞ்சீவியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தின் அறிவிப்பு சுவரொட்டியில் பூமி, நீர், நெருப்பு, காற்று மற்றும் வானம் போன்ற பஞ்சபூதங்கள் (இயற்கையின் ஐந்து கூறுகள்) நட்சத்திர வடிவத்தில், திரிசூலத்துடன் கூடிய ஒரு பொருளில் சூழப்பட்டுள்ளது.
Related Posts
திரைப்படம் என்பது அன்றாட யதார்த்தத்திலிருந்து நம்மை இலகுவாக்கி கொள்வதற்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாகும், ஃபேண்டஸி ஜானர் கொண்ட ஒரு கதையில் பார்வையாளனை முற்றிலும் வேறொரு உலகிற்கு அழைத்துச் செல்ல முடியும் என்கிற வகையில் இப்படம் இருக்கும் என்கிறார் இயக்குநர்.
இப்படிப்பட்ட திரைப்படத்தில் சிரஞ்சீவி போன்ற ஒரு நட்சத்திரம் நடித்தால், அது மிகவும் சுவாரஸ்யமாகவும் பார்வையாளனை எளிதில் கவர்ந்திழுக்ககூடியதாகவும் இருக்கும். வசிஷ்டா தனது முதல் படத்திலேயே தனது திறமையை நிரூபித்தவர் மற்றும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான UV கிரியேஷன்ஸ் இப்படத்தை தயாரிப்பதால், #Mega157 ஒரு மகத்தான படைப்பாக இருக்கும் என்கிறது தெலுங்கு திரையுலகம்