இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் கோப்ரா.விக்ரமின் 58 ஆவது படமான இதை,7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில்லலித்குமார் மற்றும்வயகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.தமிழ் தெலுங்கு இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகும் இந்தப்படத்துக்கு இசைஏ.ஆர் ரகுமான்இப்படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார்.இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு கேரளாவிலும் நடந்தது.இந்தப்படத்தில் இர்ஃபான்பதான் இண்டர்போல் ஆஃபிசர் வேடத்தில் நடிக்கிறார். முதல்கட்டப் படப்பிடிப்பில் இர்பான் பதான் கலந்து கொண்டு நடித்தார். அது முடிவடைந்ததும், வணக்கம் மக்களே.. நடிப்புலகில் முதல் படி எடுத்து வைக்கும் எனக்கு மிகவும் உதவியாய் இருந்த தமிழ் மக்களுக்கு நன்றி. முதல் schedule நல்லபடியா முடிஞ்சாச்சு.. மீண்டும் எல்லாரையும் சந்திக்க “I’m waiting”என்றுஅப்போது
இப்போது மீண்டும் அந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது.
இம்முறை கொல்கத்தாவில் படப்பிடிப்பு நடக்கிறதாம். அந்த படப்பிடிப்புத்தளத்திலிருந்து இர்பான்ஃபதான் தன் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.