தமிழகத்தில் தற்போது செயல்பாட்டில் இருப்பது 1100 திரைககள் மட்டுமே கொரோனா காலத்தில் பல திரையரங்குகள் தொழிலை தொடர்வதில் ஆர்வம் காட்டாவில்லை
நவம்பர் 4ம் தேதியன்று ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த சிலம்பரசன் நடித்துள்ள மாநாடுவிஷால், ஆர்யா நடித்துள்ள எனிமிஅருண் விஜய் நடித்துள்ள வா டீல் ஆகிய படங்கள் வெளியாகும் என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருக்கும் 1100 திரைகளில் மட்டுமே நான்கு படங்களும் திரையிட வேண்டும் அண்ணாத்த ஆளுங்கட்சி ஆதரவு, குடும்ப தொலைக்காட்சியின் தயாரிப்பு மேலும் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான டாக்டர் 740 தியேட்டர்களில் வெளியானதால் அதற்கு இணையாக அல்லது கூடுதலான திரைகளில் அண்ணாத்த படம் வெளியாகும் என தெரிகிறது
எனவே, அண்ணாத்த படத்துடன் போட்டி போடாமல் வேறொரு நாளில் படத்தை வெளியிடலாம் என ‘மாநாடு’ தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முடிவு செய்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாநாடுபடத்தை 500க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியிட்டால் தான் எதிர்பார்த்த வசூல் சில நாட்களில் கிடைக்க வாய்ப்புள்ளது. அதனால் தான் அவர் இந்த முடிவை எடுக்க இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.எனிமிபடமும் போட்டியில் இருக்குமா அல்லது கிடைத்த தியேட்டர்களே போதும் என படத்தை வெளியிடுவார்களா என்பதும் விரைவில் தெரிந்துவிடும்.