டான் டிரைலர் வெளியீடு

அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘டான்’. இப்படத்தில் பிரியங்கா மோகன், எஸ்ஜே சூர்யா, சமுத்திரகனி, முனீஷ்காந்த், தம்பி ராமையா ஆகியோர் நடித்துள்ளனர். லைகா நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷ்ன்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.
கல்லூரி கதைக்களத்தில், முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன், சூரி இருவரும் கல்லூரி மாணவர்களாக நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருக்கும் இப்படம் வரும் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

டான் பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மாலை வேல்ஸ் பல்கலைகழக வளாகத்தில் நடைபெற்றது இதில் கலந்துகொண்டு பேசிய கதாநாயகன் சிவகார்த்திகேயன், “ஒரு படம் வெற்றியடைந்தால்தான், தயாரிப்பாளர்கள் அடுத்தடுத்த படங்களில் முதலீடு செய்ய முடியும். டாக்டர் படத்திற்கு வெற்றியை கொடுத்த உங்கள் எல்லோருக்கும் நன்றி. இந்தப் படம் வெற்றியடைந்தால் அறிமுக இயக்குநர்களை கொண்டு படம் எடுக்க நம்பிக்கை கொடுக்கும்” என்றார்
மேலும் நான் ரசித்த, எனக்கு பிடித்த அத்தனை பேரையும் இந்தப் படத்தில் இணைத்துள்ளனர். சமுத்திரகனி எனர்ஜி கொடுப்பார். எத்தனை பிரச்னையில் இருந்தாலும், தம்பி வாடா பண்ணுவோம்டா, வெல்வோம்டா என்பார். அது போன்று இன்று யாரும் கூறுவதில்லை. எஸ்.ஜே.சூர்யா குரலை பேசியுள்ளேன். அதன் மூலமே கல்லூரிகளில் அடையாளப்பட்டுள்ளேன். இந்தப் படத்தில் அவருடனே நடித்துள்ளேன்இந்தப் படத்தில் எனக்கு பாடல் இருப்பதால், ஜோடி இருப்பதால் என்னை நாயகன் என பார்க்கலாம். ஆனால் இந்தப் படத்தில் இருப்பவர்கள் அனைவருமே நாயகர்கள்தான்.

அண்ணாமலை படம் பார்த்துவிட்டு வீட்டில் வந்து பத்து மாடு வாங்க போறேன். படத்தில் வருவதுபோல ஸ்வீட் கடை வைக்க போறேன்னு சொன்னேன். அப்பாவை பார்த்த போது ஐ.பி.எஸ் ஆக வேண்டும் என நினைத்தேன். இறுதியில் மிமிக்ரி பண்ணினேன் உங்கள் கைதட்டலை பார்த்து புரிந்துகொண்டேன். இந்த இடத்திற்கு வந்துள்ளேன் என்றவர் படத்தை இயக்கியுள்ள அறிமுக இயக்குநர் சிபி பற்றி கூறுகிறபோதுசிபி கடுமையாக உழைக்கிறார். நீங்கள் கடுமையாக உழைத்ததால்தான், அந்த நம்பிக்கையில்தான் நான் இங்கு நிற்கிறேன். எனக்கு ஸ்பாட்டில் ஏதாவது பஞ்ச் போட தோன்றும். ஆனால் இந்தப் படத்தில்தான் எந்த டயலாக்கையும் போட முடியவில்லை. எனக்கு, பாலாவிற்கு எல்லாம் ஆரம்பத்திலேயே புரிந்துவிட்டது. எந்த டயலாக்கையும் போட முடியாது என ஆனால் முனிஸ்காந்த் மட்டும் இறுதிவரை டயலாக்கை சேர்க்க முயற்சி செய்துகொண்டே இருந்தார்
என்று கூறினார்.
டான் படத்தின் ட்ரெய்லரை பார்க்கின்ற போது , சிவகார்த்திகேயனின் பள்ளி மற்றும் கல்லூரி கால வாழ்க்கையை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. சரியான இலக்கை தீர்மானிக்க முடியாத சராசரி இளைஞனின் கல்லூரி வாழ்க்கையும், அதில் அவன் எதிர்கொள்ளும் சவால்களும், வாழ்க்கை குறித்த புரிதல்களும், காதல், காமெடியுடன் இந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது என யூகிக்க முடிகிறது படத்தில்சமுத்திரகனி, சிவகார்த்திகேயனின் தந்தையாகவும், எஸ்.ஜே.சூர்யா கல்லூரி பேராசியராகவும், ராதாரவி கல்லூரி முதல்வர் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளதை உணர முடிகிறது. ‘எனக்குள்ள என்ன திறமை இருக்குன்னு கண்டுபிடிச்சு வாழ்க்கைல பெரிய ஆள் ஆகணும்’ இந்த ஒற்றை வசனமே படத்தின் ஒன்லைன் என ஒட்டுமொத்த ட்ரெய்லரும் உணர்த்துகிறது.