வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் புதிய படத்தில் நடிக்க உள்ளது உண்மைதான் என தயாரிப்பாளர் எல்ரெட்குமார்தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாகவும், இந்தப் படத்தை ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்க உள்ளதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் இணைவதை தயாரிப்பாளர் எல்ரெட் குமார் உறுதிப்படுத்தி உள்ளார். இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகமடைந்து உள்ளனர். மேலும் இந்தப் படத்துக்கான ஸ்கிரிப்ட் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், இது வடசென்னை படத்தின் 2-ம் பாகம் இல்லை என்றும் கூறப்படுகிறது.வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்க உள்ள படத்தையும் எல்ரெட் குமார் தான் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பை வெளிமாநிலங்களில் நடத்த திட்டமிட்டு இருந்தனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போது அந்தப் படத்தை தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இயல்புநிலை திரும்பியதும் இதன் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.