சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மூன்று படங்களில் நடிக்கும் தனுஷ்

தனுஷ் இப்ப்போது கார்த்திக் நரேன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் நடித்து வருகிறார் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் அந்தப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது

இப்படத்தைத் தொடர்ந்து சேகர்கம்முலா இயக்கும் தெலுங்குப்படம் அதனைத்தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் நானேவருவேன் ஆகிய படங்களின் படப்பிடிப்புகளில் கலந்து கொள்வார் என்று சொல்லப்படுகிறது. இவ்விரு படங்களின் படப்பிடிப்புகளிலும் மாறி மாறி நடிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது அதனை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் தனுஷ்  ராட்சசன் படத்தை இயக்கியராம்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்பின் பாலாஜிமோகன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார் என்று சொல்கிறார்கள் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மேலும் மூன்று படங்களில் நடிக்க தனுஷ் ஒப்புக்கொண்டிருக்கிறார் அதனால் அந்த மூன்று படங்களை இயக்கபோகும் இயக்குநர்கள் யார் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

ஹரிஷ்கல்யாண் நடித்த பியார்பிரேமாகாதல் படத்தை இயக்கிய இளன், அடுத்தும் ஹரிஷ்கல்யாணை வைத்தே ஸ்டார் என்கிற படம் எடுக்கிறார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்தப்படம் தொடர்ந்து நடக்காமல் கைவிடப்பட்டுவிட்டது.

இந்நிலையில், இயக்குநர் இளன் தனுஷிடம் ஒரு கதை சொல்லியிருக்கிறார். அந்தக்கதை தனுஷுக்குப் பிடித்திருக்கிறதாம். எனவே சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் படத்துக்கு அவரைப் பரிந்துரைத்திருக்கிறார். நிறுவனமும் அதை ஏற்றுக்கொண்டதாம்.

அதனால், ராம்குமார், பாலாஜி மோகன் ஆகியோரைத் தொடர்ந்து தனுஷை இயக்கவிருக்கிறார் இளன்.