தோனி பிரதமர் விஜய் முதல்வர் மதுரையில் பரபரப்பு

நடிகர் விஜய்யை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் வீரருமான தோனி இன்று சந்தித்துப் பேசினார்.

நடிகர் விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் ‘கோகுலம் ஸ்டூடியோ’வில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஷூட்டிங்கில் விஜய்யுடன் யோகிபாபு மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

இந்த நேரத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி, இன்று இந்த ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு விசிட் அடித்தார்.

அங்கே அவர் நடிகர் விஜய்யை சந்தித்துப் பேசியிருக்கிறார். சந்திப்பு முடிந்த பிறகு தோனியை விஜய் காரவன் வரையிலும் உடன் சென்று வழியனுப்பி வைத்திருக்கிறார்.

இந்தச் சந்திப்பு எதற்காக என்று தெரியவில்லை. மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றால் இப்போது எதற்கு என்ற கேள்வியும் எழுகிறது. விரைவில் இதன் காரணம் தெரிய வரலாம்..!

ஆனால் இப்போது இதுவல்ல பிரச்சினை.. இந்தச் சந்திப்பு முடிந்ததும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட செய்திகளில் தல தோனி தளபதி விஜய்யை சந்தித்தார் என்று விஜய் ரசிகர்கள் செய்திகளைப் புரப்புரை செய்தார்கள்.

இந்தச் செய்திகளில் தல தோனி என்பதை டேக் செய்து அதை வைரலாக்கினார்கள். அவ்வளவுதான். அஜீத்தின் ரசிகர்கள் கோபம் கொண்டுவிட்டார்கள். அது யாருடா தல.. இந்தியாவிலேயே தலன்னா அது அஜீத்துதான் அவர்தான் ஒரே தல என்று பொங்கித் தீர்த்துவிட்டார்கள். அஜீத் ரசிகர்கள்#ஒரே தல என்ற ஹேஸ்டேக்கை ஆகஸ்ட் 12 அன்று டீவிட்டரில் வைரலாக்கிவிட்டனர் இந்த நிலையில் மதுரையில் இருக்கும் விஜய்யின் ரசிகர்கள் அதிகப்படியாக தோனி-விஜய்சந்திப்பின் புகைப்படத்தின் பின்னணியில் ஆளப்போகும் மன்னர்கள் என குறிப்பிட்டு தோனியை PM என்றும் விஜய்யை CM என்றும் அடையாளப்படுத்தி மதுரை நகர் முழுவதும் சுவரொட்டியை ஒட்டியுள்ளனர் ஏற்கனவே ஆளும்திமுக தலைமைக்கும் விஜய் தரப்புக்கும் முட்டல் மோதல் இருந்து கொண்டுள்ளது பாஜகவில் இணையுமாறு தோனிக்கு கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது அழைப்பு விடுக்கப்பட்டது ஏற்கனவே மோடியை விஜய் ஒரு முறை பிரதமர் மோடியை சந்தித்துள்ளார் இவற்றையெல்லாம் கூட்டிக்கழித்து தோனி மூலமாக விஜய்யை பாஜகவுக்கு இழுக்க முயற்சி நடக்கிறதா என்று சினிமா வட்டாரத்தில் அடிபட தொடங்கியுள்ளது ஆளும் திமுக தலைமை இந்த போஸ்டருக்கு என்ன மாதிரியான எதிர்விளை ஆற்ற போகிறது என்கிற ஐயம் எழுந்துள்ளது