சிவகார்த்திகேயனின் SK புரொடக்ஷன்ஸ் மற்றும் ராஜேஷின் KJR ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ’டாக்டர்’. இதில் சிவகார்த்திக்கேயன் ஹீரோவாக நடித்துள்ளார். வினய், பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு, மிலிந்த் சோமன், இளவரசு, ஷாஜி சென், தீபா சங்கர், ரெடின் கிங்ஸ்லி, அருண் அலெக்சாண்டர், அர்ச்சனா மற்றும் ஜாரா வினீத் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தை கோலமாவு கோகிலா படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்து உள்ளார். 2020 ஆம் ஆண்டே தயாரான இந்தப் படம் கொரோனா ஊரடங்கு காரணமாக வெளியிடப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் இந்தப்படம் அக்டோபர் 9 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. த்ரில்லர் படமான டாக்டர் சமூக வலைதளங்களில் பெரிய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது. மேலும் திரையரங்குகளில் இருந்தும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
ஆனால், இந்த பிரச்சனைகளுக்கிடையில், டாக்டர் படம் ஆன்லைனில் பைரஸி அடிப்படையிலான தளங்கள் மற்றும் டெலிகிராம், தமிழ்ராக்கர்ஸ் மற்றும் மூவியூல்ஸ் உள்ளிட்ட இணையதளங்களில் முழுப்படம் வெளியிடப்பட்டுள்ளது
கடந்த மூன்று நாட்களில் மட்டும் இப்படத்தின் வசூல் 25 கோடியைக் கடந்திருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்திற்குக் கிடைத்துள்ள வரவேற்பு தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல திரையரங்குகளுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது