விஷாலுடன் மோதும் அதர்வாவின் தள்ளிப் போகாதே

0
186

ஜெயம் கொண்டான்’ படம் மூலம் தமிழ்த் திரையுலகத்தில் இயக்குநராக அறிமுகமானவர் ஆர்.கண்ணன். இதையடுத்து ‘சேட்டை’, ‘கண்டேன் காதலை’, ‘இவன் தந்திரன்’, ‘பூமராங்’ போன்ற படங்களை இயக்கிய அவர், அடுத்ததாக அதர்வா நடிப்பில் ‘தள்ளிப் போகாதே’ படத்தை இயக்கி உள்ளார்.

இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகையான அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.

கோபி சுந்தர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து படம் திரைக்கு வரத் தயாராக உள்ளது.

இதற்கடுத்த படமாக ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’ மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக்கையும் படமாக்கி முடித்துவிட்டார் இயக்குநர் ஆர்.கண்ணன்.

இந்நிலையில், ‘தள்ளிப் போகாதே’ படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் வருகிற அக்டோபர் 14-ம் தேதி ஆயுத பூஜை பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதே தினத்தில்தான் விஷாலின் ‘எனிமி’, ஆர்யாவின் ‘அரண்மனை-3’ ஆகிய படங்களும் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here