நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து தயாரித்துள்ள டாக்டர் திரைப்படம் அக்டோபர் 9 அன்று தமிழகத்தில் வெளியானது சுமார் 700க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியான இந்த படம் முதல்நாள் 7 கோடி ரூபாய் வரை மொத்த வசூல் செய்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன 100% இருக்கை நிரம்பினால் மட்டுமே இவ்வளவு பெரிய தொகை டிக்கட் விற்பனை மூலம் கிடைக்கும்
படத்தை திரையரங்கில் பார்த்துவிட்டு திரைப் பிரபலங்கள் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர் அந்த வகையில் இயக்குநர் ஷங்கர் டாக்டர் படத்தைபாராட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்
பொதுவாக தமிழ் படங்களை பார்த்துவிட்டு அது பற்றிய கருத்துக்களை பொதுவெளியில் கூறும் பழக்கம் ஷங்கருக்கு இல்லை நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர்ஷங்கரின் தீவிர ரசிகர் அவருக்கு பிடித்த இயக்குநர் என்று பல்வேறு நிகழ்ச்சிகளில் சிவகார்த்திகேயன் கூறியிருக்கிறார் டாக்டர் படத்தின் இயக்குநர் நெல்சன் விஜய் நடிக்கும் படத்தை தற்போது இயக்கி கொண்டுள்ளார் அதன் காரணமாக டாக்டர் படத்தை ஷங்கர் பாராட்டியிருக்கலாம் என கூறப்படுகிறது
Related Posts
ட்விட்டர் பக்கத்தில் ஷங்கர்தெரிவித்துள்ளதாவது
இந்த வைரஸ் தொற்றின் காரணமாக பலர் வருத்தத்தில் இருக்கும் நிலையில் இத்திரைப்படம் ஒரு சிரிப்பு மருந்தாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.
மேலும் இப்படிப்பட்ட சிறந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப் குமார் அவர்களுக்கும் தன்னுடைய பாராட்டுக்கள் என்று சங்கர் தெரிவித்தது மட்டுமல்லாமல் இவ்வாறு வெளிவந்த இத்திரைப்படத்தை குடும்பத்துடன் பார்த்து மகிழும் வகையில் உருவாக்கிய உள்ளீர்கள்.
அந்தவகையில் இந்த திரைப்படத்தில் இணைந்து பணியாற்றிய சிவகார்த்திகேயன் அனிருத் மற்றும் படக்குழுவினர்கள் அனைவருக்கும் தன்னுடைய வாழ்த்துக்கள் என்று ஷங்கர் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் வெகு நாள் கழித்து தியேட்டரில் படம் பார்க்க வாய்ப்பு அளித்ததற்கு நன்றி என்று கூறியுள்ளார்.