ஜிவி உடன் இது எனக்கு முதல் படம். படத்தில் பங்குபெற்ற அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் பெரிய உழைப்பை கொடுத்துள்ளனர் என்றார்
தமிழ் சினிமாவில் 2002 ல் பிரசாந்த் நாயகனாக நடித்த தமிழ் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஹரி அரசியல், சமூகம் சார்ந்த இந்தப்படம் வணிகரீதியாக பெரும்வெற்றியை பெறவில்லை2003ல் விக்ரம் நடித்த சாமி தெலுங்குபடங்களுக்கு இணையான மசாலாவாக இருந்தது படம் சூப்பர்ஹிட் அதற்கு பின் இவர் இயக்கத்தில் 2018 ல் வெளியான சாமி – 2 வரை எல்லாப்படங்களும் மசாலா படங்களே விக்ரம், சூர்யா, சரத்குமார், விஷால், சிலம்பரசன், தனுஷ் ஆகிய நடிகர்கள் நடிப்பில் வெற்றிப்படங்களை இயக்கியவர் ஹரி இவரது இயக்கத்தில் பரத் நடித்த சேவல் வெற்றிபெறவில்லை சாமி – 3 படத்திற்கு பின் சூர்யா நடிக்கும் அருவா படத்தை இயக்கப்போவதாக அறிவிப்பு வெளியானது கதையில் இவருக்கும் சூர்யாவுக்கும் ஒத்த கருத்து ஏற்படாததால் அந்தப் படம் கைவிடப்பட்டது இந்த நிலையில் என்னை அறிந்தால், குற்றம் – 23, செக்கச்சிவந்த வானம், தடயம் என வெற்றிப்படங்களில் நடித்து வரும் அருண்விஜய்-ஹரி ஆகியோர் கூட்டணியில் உருவான “யானை” திரைப்படம் ஜுன் 17 அன்று வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது Drumsticks Productions சார்பாக தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி S.சக்திவேல் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது நிகழ்ச்சியில்இயக்குனர் ஹரி பேசியதாவது….
நானும், அருண்விஜய் இணைந்து பணியாற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக விரும்பினோம். அது அமையவில்லை. இந்த கதை நாங்கள் இணைய மிக முக்கியமான காரணமாக இருந்தது. இந்த வாய்ப்பு அமைய காரணம் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி S.சக்திவேல் அவர்கள்தான். இந்த படம் பெரிய படம், பட்ஜெட் வகையில் இது அதிகம். இது உணர்வுகள் மிகுந்த கதை. ஒரு மனிதன் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்வான், அப்படியானவன் கோபப்படும் தருணம் எப்படி இருக்கும் என்பது தான் கதை. கடந்த மூன்றுவருடங்கள் எனக்கு நிறைய கற்று கொடுத்தது. படத்தை கொஞ்சம் வேற மாதிரி எடுக்க விரும்பினேன். பல மொழி இயக்குநர்களிடம் பல விஷயத்தை கற்றுகொண்டேன், பின்னர் இந்த படத்தை இயக்கியுள்ளேன். சேவல் படத்திற்கு பிறகு ஜி.வியுடன் பணி புரிந்துள்ளேன். படத்தில் நடித்துள்ள நடிகர்கள் பெரும் ஒத்துழைப்பு கொடுத்தனர்.
நான் தாமிரபரணி, ஐயா படம் எடுத்த போது பின்பற்றிய வழிமுறைகளை பின்பற்றி இப்படம் எடுத்துள்ளேன்.எனது ஆரம்பகால கட்ட படங்கள் போல் இப்படம் இருக்கும். அருவா கதை நடிகர் சூர்யா நடிப்பதற்காக எழுதப்பட்டது அது அப்படியே தான் இருக்கிறது யானைகதை அருண்விஜய்க்காக எழுதப்பட்டது என்றார்
நடிகர் அருண் விஜய் பேசியதாவது….
நானும், இயக்குனர் ஹரியும் ரொம்ப நாளாக பணியாற்ற விரும்பினோம். இவ்வளவு பெரிய பொருட்செலவில், பலமான தொழில்நுட்ப கலைஞர்களுடன் படத்தை உருவாக்க பெரிய தயாரிப்பாளர் தேவைப்பட்டார். அப்போது நாங்கள் அணுகிய நபர் சக்தி சார். அவருக்கு நன்றி. இந்த படத்தை உருவாக்க பெரிய தைரியம் வேண்டும். சுற்றியுள்ளவரை பாதுகாக்கும் ஒரு கதாபாத்திரம் தான், எனது கதாபாத்திரம். இந்த படத்தில் நிறைய சவால்கள் இருந்தது. ரொம்ப நாள் கழித்து கிராமம் சம்பந்தப்பட்ட படத்தில் நடித்துள்ளேன். ஹரி சார் எனக்கு பெரிய உதவியாக இருந்தார். படத்தின் ஆக்சன் பெரிய சவாலாக இருந்தது. எனக்கு அடிபட்டது, அதையும் மீறி படத்தை எடுத்து முடித்தோம். கண்டிப்பாக படம் பேசப்படும் என நம்புகிறோம். இது ஹரி சார் பேட்டர்னில் இருந்து மாறி எடுத்தபடம். படத்தில் நடித்த அனைவரும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். இந்த படம் அனைவரையும் எளிதாக ஈர்க்கும் படமாக இருக்கும். படத்தில் பல காட்சிகளை நான் உணர்ந்து அந்த பாத்திரமாக மாறி நடித்தேன். இந்த படம் காமெடி நிறைந்த, பொழுதுபோக்கு திரைப்படம்.பல இடங்களில் இப்படத்தை எடுத்துள்ளோம்.