இந்தியில் வெளியாகி தேசிய விருதுகளைக் குவித்த திரைப்படம் ‘அந்தாதூன்’. ஆயுஷ்மான் குர்ரானா, தபு நடிப்பில் வெளியான இப்படம் மிகப்பெரிய ஹிட். இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைக் கைப்பற்றினார் தியாகராஜன். நடிகர் பிரசாந்த் நடிக்க படம் ‘அந்தகன்’ எனும் பெயரில் படப்பிடிப்பு இன்று துவங்கியது.
இந்தப் படம் துவங்கியதற்குப் பின்னணியில் மிகப்பெரிய போராட்டமே நடந்து முடிந்திருக்கிறது. முதலில், இந்தப் படத்தை இயக்க ஒப்பந்தமானது இயக்குநர் மோகன் ராஜா. இவர் விலகிவிட, ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் இயக்குநர் ஜே.ஜே. ஃபெட்ரிக் இயக்க ஒப்பந்தமானார்.
பிரசாந்த் நடிக்க அந்தகன் படத்தின் படப்பிடிப்பு 10.03.2021 அன்று துவங்கியது. படத்தை தந்தை தியாகராஜனே தயாரித்து இயக்குகிறார். ட்விட்டரில் அந்தகன் படம் துவங்கியிருப்பதை பிரசாந்த் அறிவித்த சில மணிநேரங்களில் படத்திலிருந்து விலகிவிட்டதாக இயக்குநர் ஃபெட்ரிக் ட்விட்டரில் அறிவித்தார்.
அந்தாதூன் படத்தில் ஆயுஷ்மான் குர்ரானா ரோலில் பிரசாந்தும், தபு ரோலில் சிம்ரன் தமிழிலும் நடிக்கிறார்கள். ஏற்கெனவே, தியாகராஜன் இயக்கத்தில் ‘ஆணழகன்’,’ஷாக்’ , ‘பொன்னார் சங்கர்’ ‘மம்பட்டியான்’ உள்ளிட்டப் படங்களில் பிரசாந்த் நடித்திருக்கிறார் என்பது நினைவுக்கூரத்தக்கது. ஆக, இந்த பிரசாந்துக்கு தந்தையின் இயக்கத்தில் நடிப்பதொன்றும் புதிதல்ல