அல்லு அர்ச்சுனை பாராடியசூர்யா

நூற்றாண்டுகொண்டாடிய இந்திய சினிமாவில் தெலுங்கு திரைப்படங்களின் பங்களிப்பு அளப்பரியது. இந்தி, தமிழ், மலையாளம், கன்னட சினிமாக்கள் தங்கள் மொழி, கலாச்சார எல்லைகளை கடந்து திரைப்படங்களை தயாரித்தபோதும் தெலுங்கு சினிமா முக்கால் நூற்றாண்டுகாலம் தங்கள் மொழி, மாநிலம், கலாச்சாரத்தை கடந்து படங்களை தயாரிக்கவில்லை. தற்போது சர்வதேச அரங்கில் போட்டிபோடுகிற அளவிற்கு தெலுங்கு திரைப்படங்கள் முன்னேற்றம் கண்டு வருகிறது. பாகுபலி,RRR, புஷ்பா போன்ற படங்களின் படைப்பு திறனும், பாக்ஸ்ஆபீஸ் வசூலும் அதனை உறுதிப்படுத்துகிறது. இந்த நிலையில் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம் பெற்ற பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்த சூழலில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்கு முதல் முறையாக புஷ்பா படத்தில் நாயகனாக நடித்ததற்காக 

அல்லு அர்ச்சுன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்த விருதுக்கான போட்டியில் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட ஜெய் பீம் படத்தின் நாயகனும், தயாரிப்பாளருமான நடிகர் சூர்யா அல்லு அர்ச்சுனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய திரையுலகினரை கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும், தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது 69 ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் நேற்று மாலை அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில், நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ‘புஷ்பா தி ரைஸ்’ படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் தெலுங்கில் முதல் முறையாக சிறந்த நடிகருக்கானதேசிய விருதை பெற்ற முதல் நடிகர் என்கிற சாதனையை அல்லு அர்ஜுன் பெற்றுள்ளார்.இதுவரை எந்த தெலுங்கு நடிகரும் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெறாத நிலையில், முதல் முறையாக அல்லு அர்ஜுனுக்கு, சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளதை தெலுங்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பெருமையுடன் கொண்டாடி வருகிறார்கள்.தெலுங்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும், அல்லு அர்ஜுனுக்கு தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த நடிகருக்கான விருதுக்கான போட்டியில் இருந்த ஜெய்பீம் படத்தின் நாயகனும், தயாரிப்பாளருமான சூர்யா
தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றதன் மூலம் தெலுங்கு திரையுலகில் வரலாறு படைத்துள்ளீர்கள். உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்களுக்கு கிடைத்த தகுதியான அங்கீகாரம் தேவிஸ்ரீபிரசாத். வாழ்த்துகள்” என தேசிய விருது பெற்ற அல்லு அர்ஜூன், தேவிஸ்ரீபிரசாத் ஆகிய இருவரையும் சூர்யா வாழ்த்தியுள்ளார்.