குழந்தை பிறப்பின் சந்தேகங்களுக்கு முற்றுபுள்ளிவைத்த சின்மயி

தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக சினிமா, சமூகம் சார்ந்த விஷயங்களில் எதிர்வினை பற்றிய பயம் இன்றி கருத்துக்களை சமூகவலைதளங்கள் மூலமாக வெளியிட்டுபரபரப்புக்குரியவராகஇருந்து வந்தார் பின்னணி பாடகி சின்மயி. சகபெண் திரைகலைஞர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும்போது தனது குரலை தவறாமல் அழுத்தமாகபதிவு செய்து வந்தார். இந்த சமயத்தில் தான் கடந்த ஜூன் மாதம் திடீரென தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாக அறிவித்தார் சின்மயி.அதுவரை தான் கர்ப்பமான புகைப்படங்களையோ அல்லது வளைகாப்பு போன்ற விசேஷ நிகழ்வுகள் நடைபெற்ற புகைப்படங்கள் எதையும் அவர் பிற திரை கலைஞர்கள் போன்று பொதுவெளியில் பகிர்ந்து கொள்ளாததால் ஒருவேளை வாடகைத்தாய் மூலமாக சின்மயி குழந்தை பெற்றிருக்கலாம் என்றே பலரும் அப்போது சந்தேகக் கேள்விகளை எழுப்பி வந்தனர்.இந்த நிலையில் தற்போது விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதியினர் இரட்டை குழந்தைகள் பெற்ற விவகாரம் வெளியானது தாங்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றதை ஒப்புக்கொண்டுள்ளனர்இந்த நிலையில் தான் சின்மயி தான் கர்ப்பமாக இருந்தபோது எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தான் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெறவில்லை என இதுவரை நிலவிய சந்தேகத்திற்கு. முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.