கருத்துவேறுபாட்டில் கௌதம்மேனன் – தயாரிப்பாளர் ஐ சரி கணேஷ்

0
368

எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்துக்குப் பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஜோஷ்வா: இமை போல் காக்க’. வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் வருண், ராஹி உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்

இதன் பெரும்பாலான பகுதிகளின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்புநடத்தவேண்டியிருக்கிறதுஇந்தப் படத்தின் டீசர் வெளியாகி சிறப்பானவரவேற்பைப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து ‘நான் உன் ஜோஷ்வா’ என்ற பாடல் காணொலி வடிவில் இன்று ஜூலை 16வெளியாகியுள்ளது.

இதனிடையே இப்படத்தில் நடிகர் கிருஷ்ணா வில்லனாக நடித்திருப்பதாக கெளதம் மேனன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“‘ஜோஷ்வா’ படத்தில் வில்லன் கிருஷ்ணாவை அறிமுகப்படுத்த வேண்டிய நேரமிது. எனக்காக இதை ஒப்புக்கொண்ட உங்களுக்கு மிகவும் நன்றி கிருஷ்ணா. நீங்கள் பார்க்க மிகவும் அழகாக இருக்கிறீர்கள் சகோதரா”.

இவ்வாறு கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.

இதற்கு நடிகர் கிருஷ்ணா தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பின் மூலம், பட நிறுவனத்துக்கும் இயக்குநர் கெளதம்மேனனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

ஏனெனில் காலை 11 மணிக்கு இப்பாடல் காணொலி வெளியாகும் என்று இயக்குநர் அறிவித்திருந்தார். 11 மணிக்கு படநிறுவனமும் படத்தின் நாயகனும் பாடலை வெளியிட்டனர்.

அதன்பின் ஒரு மணி நேரம் கழித்து இயக்குநர் கெளதம்மேனன், இப்பாடலின் இணைப்பை மட்டும் பகிர்ந்து கிருஷ்ணா பற்றிய தகவலைச் சொல்லி அவரைப் பாராட்டியிருந்தார். இதை படநிறுவனமோ கதாநாயகனோ பகிரவில்லை.

இதனால் நடிகர் கிருஷ்ணா விசயத்தில் இயக்குநருக்கும் படநிறுவனத்துக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது என்று சொல்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here