வெங்கடேஷ் இயக்கத்தில் விமல் நடிக்கும் பேய் படம்

மல்லிகா ஷெராவத், ரிதிக்கா சென், யாஷிகா ஆனந்த் நடிப்பில், வடிவுடையான் இயக்கத்தில் உருவாகி வரும் பாம்பாட்டம் மற்றும் விஜய் சத்யா, ஷெரின், சம்யுக்தா நடிப்பில், வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ரஜினி படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் வெங்கடேஷ் இயக்கத்தில் விமல் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தையும் தயாரிக்கிறது, வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம்.

படத்தில் தம்பி ராமய்யா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அம்ரீஷ் இசை அமைக்கிறார். படம் பற்றி ஏ.வெங்டேஷ் கூறியதாவது: நான் இயக்கும் முதல் பேய் படம் இது. முற்றிலும் மாறுபட்ட இது வரை யாரும் பார்த்திராத ஒரு வித்தியாசமான ஹாரர் படம் இது.

தமிழ் சினிமாவில் எத்தனையோ பேய் படங்கள் வந்திருக்கின்றன ஆனால் இது வழக்கமான பேய் படம் அல்ல முற்றிலும் மாறுபட்ட திரைக்கதை இதிலிருக்கும். பேய் பயமுறுத்தும் காட்சிகள் இருந்தாலும் காமெடிக்கு முக்கியத்தும் கொடுத்து ஜனரஞ்சகமான படமாக உருவாக்க இருக்கிறேன். நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு துவங்கி ஒரே கட்டமாக முடிக்க திட்டமிட்டுளோம். என்றார்.