ஜீவா நடித்துள்ள கொரில்லா திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது படக்குழு.
டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா நடித்திருக்கும் படம் கொரில்லா. காமெடி என்டர்டெயினர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் அர்ஜுன் ரெட்டி படத்தின் நாயகி ஷாலினி பாண்டே ஜீவாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
மேலும், சிறப்பம்சமாக நிஜ சிம்பான்சியும் படத்தில் நடித்துள்ளது.இதற்குப் பதிலளித்த படக்குழு, பாங்காங்கில் படப்பிடிப்பு நடக்கும் சமயமே விலங்குகள் நல வாரியத்திடம் முறையான அனுமதி பெற்றுதான் அனைத்தும் நடந்துள்ளது எனத் தெரிவித்துள்ளனர். மேலும் கொரில்லா வரும் ஜூலை 5ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.
இந்தப் படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பேனரில் விஜய் ராகவேந்திரா தயாரித்துள்ளார். சதீஷ், ராதாரவி, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். குழந்தைகளை ஈர்க்கும் வகையில் அமைந்த இதன் ட்ரெய்லர் சில வாரங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.