வரலாறு பெருமை கொண்ட இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்

வரலாற்றில் சிலர்இடம்

பிடிக்க போராடுவார்கள் தங்களை பெருமைபடுத்திக் கொள்ள
 சிலரை வரலாறு தன்னுள் பதிவு செய்து பெருமை கொள்ளும் அத்தகைய ஆளுமை, பொதுவுடமை சித்தாந்தவாதி என தன்னை பகிரங்கமாக பிரகடனப்படுத்தி கொண்டு திரைப்படங்களை இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன்
பதினெட்டு ஆண்டுகளில் 5 படங்கள் மட்டுமே இயக்கினாலும் தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத ஆளுமை இயக்குநர்களில் இடம்பெற்றவர் எஸ்.பி.ஜனநாதன். தற்போது விஜய்சேதுபதி நடித்து வரும் ‘லாபம்’ படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள்  நடைபெற்று வந்தன கடந்த வியாழன் (மார்ச் 11) அன்று மதியம் படத்தொகுப்புப் பணிகளிலிருந்து வீட்டிற்குச் சாப்பிடச் சென்றுள்ளார் ஜனநாதன் நீண்ட நேரமாகத் திரும்பாத காரணத்தால் அவருடைய உதவியாளர்கள் வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் வீட்டில் சுயநினைவின்றி இருந்துள்ளார்.உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவர்கள் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துப் பரிசோதனை செய்தார்கள். அவரது மூளையில் ரத்தக் கசிவு இருந்ததால்அதற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவருடைய உயிர் பிரிந்ததாக அதிகாரபூர்வமாக. அறிவிக்கப்பட்டுள்ளது

தஞ்சாவூர் மாவட்டம் வடசேரியில் 1959-ம் ஆண்டு மே 7 ஆம் தேதி பிறந்தவர் எஸ்.பி.ஜனநாதன். இயக்குநராக வேண்டும் என்று ஆசை கொண்டு பி.லெனின், பரதன், வின்சென்ட் செல்வா மற்றும் கேயார் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார். அதனைத் தொடர்ந்து அவருடைய இயக்கத்தில் 2003ல் வெளியான முதல் படம் ‘இயற்கை
இந்தப் படத்துக்குப் பெரும் வரவேற்பு கிடைத்ததுடன், முதல் படத்திலேயேசிறந்ததமிழ் படத்துக்கான தேசிய விருதையும் வென்று சாதனை படைத்தவர் எஸ்.பி.ஜனநாதன்
அதனைத் தொடர்ந்து 2007ம் ஆண்டு ‘ஈ’, ‘2009ம் வருடம்பேராண்மை’, ‘2015ம் வருடம்புறம்போக்கு@ பொதுவுடைமை’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார் எஸ்.பி.ஜனநாதன்.
.இந்தப் படங்கள் போக தன்னிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கல்யாண் இயக்கத்தில் வெளியான ‘பூலோகம்’ படத்துக்கு வசனங்கள் எழுதியவர் எஸ்.பி.ஜனநாதன் எழுதியுள்ளார்.
இவர் திருமணம் செய்து கொள்ளவே இல்லை. படங்கள் இயக்கியது மட்டுமின்றி, தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் பொருளாளராக சில காலம் பணியாற்றியவர்  எஸ்.பி.ஜனநாதன்.
மக்கள் இயக்குநர்’ என்றால், எஸ்.பி.ஜனநாதன் அவர்களைச் சொல்லலாம்.எளிய மனிதர்களை – அவர்களின் வாழ்க்கை எதார்த்தத்தை அப்படியே திரையில் காண்பித்தவர், கறுப்பர்கள் வில்லன்கள் அல்லர் என்பதை உணர்த்தியவர், முதலாளித்துவ நாடுகள்மூன்றாம் உலக நாடுகள் மீது நடத்தும் மறைமுக போரை – ஆதிக்கத்தை தான் இயக்கிய
ஈ, பேராண்மை படங்களின் மூலம்
 .உணரவைத்தவர்,  உழைப்பின் காரணமாகவே ஒரு பொருள் புதிய பரிணாமம் பெறுகிறது என்பதை எளிய மக்களுக்கும் புரியும் வகையில் திரைப்படம் மூலமாக எடுத்துச் சொன்னவர்,  நக்சலைட்டுகள் தீவிரவாதிகள் அல்லர்; தேசபக்தர்கள் என்பதை புறம்போக்கு@பொதுவுடமை படத்தின் மூலம்உணர்த்தியவர்..
இப்படி எத்தனையோ சமூகப் பாடங்களை சுவாரஸ்யமாக திரைமொழி மூலம் பதிவு செய்தவர்
துணிச்சலும், அறிவும் ஒருங்கே கொண்ட ஒருவரால்தான் இப்படிப்பட்ட படங்களை உருவாக்க முடியும். பொதுவுடமை சிந்தனையாளர், மிகச்சிறந்த படிப்பாளி, எளிமையான, எதிரியும் இன்முகத்துடன் வரவேற்க கூடிய மனிதராக திரையுலகில் வலம் வந்தவர் எஸ்.பி.ஜனநாதன்
திரைப்பட இயக்குநர் என்பது கிரீடம் அல்ல. மக்களுக்கு நல்ல கருத்துக்களைச் சொல்லும் பொறுப்பு.   ஒரு விவசாயி, செருப்புத் தைக்கும் தொழிலாளி போன்றவர்களைவிட திரைப்பட இயக்குநர் பெரியவர் அல்ல’ என்பார்.
படைப்புகள் அனைத்தும் மக்களுக்காகவே’ என்கிற சிந்தனை உள்ளவர் மட்டுமல்ல அதனை நடைமுறைப்படுத்தி வாழ்ந்து காட்டியவர்