அட்லி இயக்கிய ஜவான் படத்திற்கு கிடைத்த ஹாலிவுட் கௌரவம்

ஷாருக்கான், இயக்குநர் அட்லி கூட்டணியில் உருவான ஜவான் இந்திய திரையுலக வரலாற்றில் பல புதிய சாதனைகளை படைத்த நிலையில், தற்போது  ஹாலிவுட்டில் வழங்கப்படும் ஹாலிவுட் கிரியேட்டிவ் அல்லயன்ஸ் ( Hollywood Creative Alliance ) விருதுக்கான தேர்வுப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

ஆர்யா, நயன்தாரா நடிப்பில் வெளியானராஜா ராணி படத்தின்  மூலம் திரையுலக பயணத்தை துவங்கிய அட்லி, தெறி, மெர்சல், பிகில் படங்கள் மூலம் உச்சம் தொட்டாலும், ஏற்கனவே வெளியான தமிழ் படங்களில் இடம் பெற்ற காட்சிகளை, கதைகளை உல்டா செய்து படங்களை இயக்குகிறார். திட்டமிட்டதை காட்டிலும் படத்திற்கான பட்ஜெட்டை அதிகப்படுத்துகிறார் என்கிற குற்றசாட்டு அட்லி மீது கூறப்பட்டு வந்தது. அதன் காரணமாக தமிழில் புதிய வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நிலையில் ஜவான் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தியில் இவர் இயக்கத்தில் ஜவான் ஷாருக்கானுக்கு மிகப்பெரும்வெற்றிப்படமாக அமைந்ததுடன் உலக அளவில், இந்திய அளவில் வசூலில் பல்வேறு முதல் சாதனைகளை நிகழ்த்தியது ஜவான்.
தற்போது ‘ஜவான்’ மூலம் ஹாலிவுட்டில் இடம்பெற்ற முதல் தமிழ் இயக்குநராகவும் சாதனை படைத்திருக்கிறார் அட்லி.
இப்படம் இந்தியாவில் திரையரங்குகளில் 3.5 கோடி பார்வையாளர்களைப் பெற்றது, இந்தியாவில் 1080 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்த , முதல்படமாக சாதனை படைத்தது.
 ஹாலிவுட்டில் வருடா வருடம் வழங்கப்படும், உலகளவிலான சிறந்த படங்களுக்கான ஹாலிவுட் கிரியேட்டிவ் அல்லயன்ஸ் ( Hollywood Creative Alliance ) விருதுக்கான தேர்வுப்பட்டியலில் இந்தியா சார்பில் இடம்பிடித்துள்ளது.