மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 படம் அறிவிக்கப்பட்ட போது இயக்குநர் படமாக இருந்தது அந்தப் படத்தில் ஆண்ட்ரியா நடிப்பதாக அறிவிக்கப்பட்டு அதன் முதல் பார்வை வெளியிடப்பட்டது அதில் ஆண்ட்ரியா நிர்வாணக்கோலத்தில் இருப்பதை பார்த்தபோது ஒன்லி ஆண்களுக்கான படமாக மாற்றம் கண்டது
சைக்கோ படம் பார்த்தேன், மிஷ்கின் உழைப்பு பிரமாதமாக இருந்தது. படம் ரொம்ப பிடிச்சிருந்தது. ஒவ்வொரு ஷாட்டிலும் கதை சொல்லியிருந்தார். ஒரு நாள் யதேச்சையாக போனில் கூப்பிட்டேன். வாங்க பேசலாம் என்றார், போனேன். அவர் பேச பேச எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.
நான் ஓசோவோட டிராவல் பண்ணினேன் என்றார். என்னடா டிராவல் இது அவர் படம்தானே பண்றார் என்று நினைத்தேன். 8 மணி நேரம் அவருடன் பேசிய பிறகுதான் அவரை புரிந்து கொள்ள முடிந்தது.
பிசாசு கதை கேட்டேன். அந்த கதை ரொம்ப ஆழமாக இருந்தது. படத்தோட கேரக்டர்களை உருவாக்கி வைத்திருந்த விதம் பிரமிக்க வைத்தது. எனக்கு ஏதாவது கொடுங்க ஒரு இரண்டு நாள் பண்ணிக் கொடுக்கிறேன் என்றேன் அப்படித்தான் பிசாசு – 2 படத்தில் நடித்தேன் இந்தபடத்தில் பணியாற்றியது பல விஷயங்களை அவரிடம் இருந்து கற்றுக் கொள்வதற்காகத்தான் என கூறியுள்ளார்