இந்தியன்-2ல் 30000ம் ஸ்டண்ட் கலைஞர்கள்

கமல் – ஷங்கர் மீண்டும் இணைந்திருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தைப் பற்றிய செய்திகள் சில நாட்கள் வராமலிருந்தது.

இப்போது, அவர்களாகவே செய்தியைக் கொடுக்கத் தொடங்கியிருக்கின்றனர். ஆனால், இந்த இரண்டு இடைப்பட்ட சம்பவங்களுக்கு இடையே நடைபெற்ற நிகழ்ச்சிகள் என்னென்ன என்பதைப் பற்றி விசாரித்தபோது பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன.
இந்தியன் 2 திரைப்படம் தொடங்கியபோது பல தரப்பிலிருந்தும் வந்த விமர்சனம் என்னவென்றால், ‘அரசியலில் இறங்கிவிட்ட கமல் எப்படி ஷூட்டிங்குக்குச் சரியாக வருவார்?’ என்பதாகவே இருந்தது.
 அதற்கேற்ப திடீரென இந்தியன் 2 திரைப்பட செட் பிரிக்கப்பட்டு, படத்தில் நடித்தவர்கள் அடுத்தடுத்த படங்களுக்குச் சென்றுவிட்டதால், இதை மருதநாயகம் வரிசையில் சேர்த்துவிட்டனர். ஆனால், இப்போது காலம் மாறியிருக்கிறது.
ஷங்கரின் திட்டப்படி, மிக பிரமாண்டமான ஒரு சண்டைக் காட்சியை எடுக்க வேண்டும் என்பது அவரது திட்டம். அந்நியன் திரைப்படத்தில் முந்நூறு சண்டை வீரர்களை வைத்து எடுத்திருப்பார். அதுபோலவே, எந்திரன் படத்தில் மூவாயிரம் ரோபோட்களை வைத்து ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்கியிருப்பார்.
ஆனால், இப்போது முப்பதாயிரம் பேர் ஈடுபடும் ஒரு சண்டைக்காட்சியை எடுக்க வேண்டும் என்பது திட்டம். இதில் சண்டைக் காட்சியின் ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியாக எடுத்து சேர்க்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது.
எனவே, ஒவ்வொரு காட்சியிலும் கமல்ஹாசன் செய்யும் சாகசங்களை திரும்பத் திரும்ப செய்யவேண்டியதிருந்தது. இதற்கு ஷங்கர் எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்தார். ஹாலிவுட்டின் புகழ்பெற்ற திரைப்படங்களான Fast & Furious சீரீஸின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்த குழுவினை வரவழைக்க தயாராகிவிட்டார்.
ஆனால், இந்தளவுக்குப் பெரிய சண்டைக்காட்சியில் நடிக்க கமலின் உடல் ஒத்துழைக்க வேண்டுமே இதனால் தனது உடலின் முழு பரிசோதனைகளையும் எடுத்துப் பார்த்திருக்கிறார்
அப்போது, கமலின் காலில் இருக்கும் சிறு பிரச்சினையின் காரணமாக, இந்த ஸ்டண்ட் காட்சிகளால் மேலும் பாதிப்பு ஏற்படக்கூடிய சூழல் இருந்தது. எனவே, முதலில் என்னை சரிசெய்துகொண்டு வருகிறேன். அதன்பிறகு ஷூட்டிங் எடுப்போம்.
எனக்குண்டான காயம் அது தன்னால ஆறிடும். ஆனால், ஷூட்டிங் பாதியில் நின்னால் சம்பளம் கொடுக்க முடியாதே என்று கமல்ஹாசன் கூறிய திட்டத்தின்படியே ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு கமல் வெளிநாடு சென்று அறுவை சிகிச்சையை முடித்துக்கொண்டு வந்திருக்கிறார்.
இப்போது முழுவதும் குணமாகிவிட்டதால் ஷூட்டிங்கைத் தொடங்கிவிட்டார்கள். அதற்காக இதனை எல்லோருக்கும் சொல்லவேண்டுமா என்ற கேள்வி இங்கு எழுகிறது
இந்தியன் 2 திரைப்படத்தின் போஸ்டர் வெளியானபோது கமல்ஹாசனின் தோற்றத்தைப் பார்த்து பாலிவுட் வரை சிலாகித்துப் பேசினார்கள். அதன்பிறகு சேனாதிபதியின் முழு தோற்றத்தை வெளியிட்டபோது பலரும் ஆச்சர்யப்பட்டனர்.
அதன்பிறகு இந்தியன் 2 திரைப்படம் மேக்கிங்கில் இருப்பதையே பலரும் மறந்துவிட்டதாலும், தாங்கள் வேலை செய்யும் படத்தைப் பற்றிய செய்திகளை அவ்வப்போது பார்த்தால் வேலை செய்பவர்களுக்கு உற்சாகமாக இருக்கும் என்பதாலும் தற்போதைய ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை வெளியிட்டிருக்கிறது படக்குழு.

பல நூறு குதிரைகள் மற்றும் ஸ்டண்ட் வீரர்கள் சேர்ந்து நடிக்கும் சண்டைக் காட்சிகளை தனித்தனியாக எடுத்து, அனைத்தையும் பிறகு ஒன்று சேர்க்கவேண்டிய பிரமாண்டமான சண்டைக் காட்சிக்கான ஷூட்டிங் தற்போது பூந்தமல்லியிலுள்ள படப்பிடிப்பு தளத்தில்லநடைபெற்று வருகிறது.