கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய பிரபலங்கள்

பிரான்ஸ் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழா சர்வதேச சினிமாவில் முக்கியத்துவம்மிக்கது 75-வது கேன்ஸ் திரைப்பட விழா நேற்று (மே 17) கோலாகலமாக தொடங்கியது. வரும் 28ம் தேதி வரை நடைபெறவுள்ள இவ்விழாவில், தமிழ், மராத்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளின் திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. இவ்விழாவில், இந்தியா சார்பில், மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தலைமையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர் மாதவன், நடிகைகள் நயன்தாரா, தமன்னா உள்ளிட்ட 11 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்றுள்ளனர். தொடக்க விழாவில், ஏஆர் ரஹ்மான், கமல்ஹாசன், மாதவன் உள்ளிட்டோருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து ஏ.ஆர். ரஹ்மான் கூறுகையில், “இங்கே வந்திருப்பது ஒரு பெரிய கௌரவம். நான் இயக்கிய முதல் படமான ‘லி மஸ்க்’ இவ்விழாவில் திரையிடப்படுகிறது. நாங்கள் அனைவரும் உற்சாகமாக இருக்கிறோம்” என குறிப்பிட்டார்
இதே போன்று இவ்விழாவில் மாதவன் நடித்துள்ள ராக்கெட்ரி திரைப்படம் திரையிடப்பட இருக்கிறது. அதே போல கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ படத்தின் டிரைலரும் திரையிடப்படவுள்ளதுதமிழ் சினிமாவில் இயக்குநர் பா.ரஞ்சித், 75வதுகேன்ஸ்  திரைப்பட விழாவில், முதன்முறையாக கலந்துகொண்டிருப்பது தமிழ் சினிமாவில் முக்கியத்துவமிக்க நிகழ்வாக பார்க்கப்படுகிறது
2012 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்றஅட்டக்கத்தி’ திரைப்படம் மூலம் இயக்குநராகஅறிமுகமான
பா. ரஞ்சித் தனது முதல் படத்திலேயே தனித்துவமான கதைக்களம் மூலம் தமிழ் திரையுலகில் கவனம் ஈர்த்தார் அதனால் உடனடியாக கார்த்தி கதாநாயகனாக நடித்து வெளியான மெட்ராஸ் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார்வட சென்னை பகுதியில் சுவரை வைத்து நிலவும் அரசியலை மிக நுட்பமாகவும் ஆழமாகவும் பதிவு செய்த படம்மெட்ராஸ் தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்த கபாலி, காலா படங்களை இயக்கும் வாய்ப்பை பெற்ற பா.ரஞ்சித் வஞ்சிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை இப்படங்கள் மூலம் பதிவு செய்தார்
நீலம் புரொட்க்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிபரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு உள்ளிட்ட படங்களை தயாரித்தார். கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்ட இந்திய திரைப்பிரபலங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது போன்று.  இயக்குநர் பா.ரஞ்சத்திற்கும் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது இது சம்பந்தமான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பெருமையுடன்பகிரப்பட்டு வருகிறது
நீலம் ஸ்டுடியோ தயாரிப்பு நிறுவனத்துடன் கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் ‘வேட்டுவம்’ படம் மற்றும் இணையதொடரை இயக்குநர் பா.ரஞ்சித் இயக்குகிறார். இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்படுவதையொட்டி அவர் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்டிருக்கிறார்