காதல் கணவரும், நடிகருமான நாகசைதன்யாவுடன் தனது திருமணம் முறிவை சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் சமந்தா.
அதற்கு பல்வேறு விதமான கருத்துக்கள், விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில், ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. குறிப்பாக சமந்தா பக்கமே தவறு இருப்பது போல பலரும் குற்றம் சாட்டி பதிவுகளை இட்டு வருகின்றனர் பெண் என்பவள் அடங்கிப் போகவேண்டும் ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்
திருமணத்திற்கு பின் பெண் என்பவள் குடும்பத்திற்கு கட்டுப்பட்டவள் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் கணவனை மீறி சுயமாக முடிவு எடுக்க கூடாது என்கிற ஆணாதிக்க சமூகத்தின் கருத்துக்களாகவே இவைகள் இருந்தன
Related Posts
திருமணத்திற்கு பின்பு நாகசைதன்யா நடிகைகளுடன் நெருக்கமான படுக்கையறை காட்சிகளில் நடிப்பது ரசிக்கப்பட்டது அதனை சமந்தா செய்தபோது தவறு என விமர்சிக்கப்பட்டது இந்த நிலையில்
சமூக வலைத்தளங்களில்மீண்டும் ஆக்டிவாக செயல்பட துவங்கியுள்ள சமந்தா, இந்த விமர்சனங்கள் குறித்து பரிதா என்கிற எழுத்தாளர் ஒருவரின் கருத்தை தனது பதிலாக பதிவிட்டுள்ளார்.
அதில், ‘பெண்கள் செய்கின்ற விஷயமெல்லாம் இங்கே ஒழுக்கத்துக்கு உட்பட்டு கேள்வி கேட்கப்படும் என்பது மாறாத விஷயம் என்றால், ஆண்கள் செய்வது மட்டும் ஒழுக்கத்துக்கு உட்பட்டு கேள்வி கேட்கப்படுவதில்லையே ஏன்.? அப்படியானால் நமது சமூகத்தில் அடிப்படையிலேயே ஒழுக்கம் இல்லை” என கூறப்பட்டுள்ளது. பொதுவாக திருமண முறிவு என வரும்போது, அதிலும் சினிமா நட்சத்திரங்கள் என்கிறபோது பெண்கள் தான் குற்றம் சாட்டப்படுகின்றனர் என்று கூறுவதற்கு சமந்தா பதிலடி கொடுப்பதாகவே இந்த பதிவு அமைந்துள்ளது.