நடந்து முடிந்துள்ள உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அவரது கொடி, மற்றும் புகைப்படத்தை பிரசாரத்திற்கு பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது
இது குறித்து மதுரை மாவட்டத்தில் இருந்து தேர்தல் பணிகளுக்காக சென்றவிஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தளபதி விஜய் தனது போட்டோ மற்றும் கொடியினை பயன்படுத்த சம்மதம் தெரிவித்தது ஏற்கெனவே திட்டமிடப்பட்ட ஒன்று என்றாலும் அவை மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு பெரும் உற்சாகத்தை தந்தது. வார்டு மெம்பர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் என அனைத்து பதவிகளுக்கும் போட்டியிட்டனர். வாக்காளர்கள் நமக்கு கடவுள் மாதிரிநாம செய்த பொது காரியங்களையும் செய்ய இருப்பதையும் கூறி வாக்குகேளுங்க, எக்காரணத்தை கொண்டும் வாக்குக்கு பணம் கொடுக்கவேண்டாம் என்பது உள்ளிட்ட சில கண்டிஷன் மற்றும் ஆலோசனைகளை தலைமையில் இருந்து கூறியிருந்தார்கள்தளபதி விஜயின் முகமாக புஸ்ஸி ஆனந்தும் பிரச்சாரத்துக்கு வந்திருந்து வாக்கு கேட்டார். இதில் மொத்தம் 115 வார்டு மெம்பர்கள் வெற்றி பெற்று அனைத்து கட்சிகளின் கவனத்தையும் பெற்றோம். விஜய் பிரசாரத்துக்கு வரல அவர் படத்தையும், கொடியையும் காட்டியே 115 இடங்களை பிடிச்சுட்டாங்களேனு பெரிய கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் வாய் பிளந்து நிற்கிறார்கள் தற்போது சில இடங்களில் ஊராட்சி மன்ற துணை தலைவர் பதவியையும் கைப்பற்றியிருக்கிறோம்.
ஒன்பது மாவட்ட தேர்தல் தந்த உற்சாகம் அடுத்து வர உள்ள மாநகராட்சி, நகராட்சி தேர்தலில் கவனம் செலுத்த இப்போதே தலைமை அறிவுறுத்தி விட்டதுஅதற்கு முன்னதாக வெற்றி பெற்றவர்களையும், வெற்றிகாக உழைத்தவர்களையும் அழைத்து பாராட்டு கூட்டம் நடத்த விஜய் முடிவு செய்திருக்கிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாணியை தற்போது கையில் எடுத்திருக்கும் விஜய் வெற்றி பெற்றவர்களை சந்தித்து பாராட்டுகிறார். இன்று முதல் இந்த கூட்டம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்றவரிடம் இந்த வெற்றி உண்மையிலேய விஜய்க்காக விழுந்த வாக்குகளா என்றபோது தேர்தல் களத்தில் அதிமுக- திமுக என இரு பெரும் கட்சிகளை எதிர்கொள்ளும்போது அவர்கள் வெற்றிபெற என்னவெல்லாம் செய்தார்களோ அவற்றை எங்கள் வேட்பாளர்களும் செய்தார்கள் எல்லா வேட்பாளர்களும் அவரவர் பகுதி, வார்டுகளில் செல்வாக்கு மிக்கவர்கள் விஜய் மக்கள் இயக்கம், அதன் கொடி என்பது கூடுதல் பலமாகவும், பாதுகாப்புக்கும் பயன்பட்டது என்றவர் நாங்கள் என்ன ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை தேர்தல் களத்தில் எதிரிகள் தீர்மானித்தார்கள் என்றார் அர்த்தம் நிறைந்த புன்னகையுடன் திமுக, அதிமுகவுக்கு இணையாக அவர்களை போன்று விஜய் மக்கள் இயக்கம் தேர்தலை சந்திக்க தயாராகிவிட்டார்கள் என்பதை காட்டுகிறது