கேரளாவில் கல்லா கட்டிய கைதி

பிகில் படத்திற்கு போட்டியாக தீபாவளி பண்டிகைக்கு வெளியான படம் கைதி. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படம் படு த்ரில்லிங்காக இருந்ததால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

தற்போது கைதி ஆந்திரா மற்றும் கேரளாவில் ஓடி முடிந்துள்ள நிலையில் இறுதி வசூல் விவரங்கள் வெளிவந்துள்ளது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கைதி படத்தை 3.5 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்திருந்தனர். படத்தை வெளியிட்டவர்களுக்கு தற்போது அந்த பணம் இரண்டு மடங்காக கிடைத்துள்ளது.

தெலுங்கு மாநிலங்களில் வந்த ஷேர் மட்டும் 7.33 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் இறுதியில் கைதி படம் 9 கோடி ருபாய் வசூலித்துள்ளது. அதில் விநியோகஸ்தர் ஷேர் 4.1 கோடி ருபாய் வந்துள்ளது.