நல்ல வேளை தர்பாரில் நடிக்கவில்லை-காஜல்

ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ திரைப்படம் நேற்று முன் தினம் உலகம் முழுவதும் சுமார் 7 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகி தற்போது வெற்றி நடை போட்டு வருகிறது.
இந்த படத்திற்கு ஒரு சில நெகட்டிவ் விமர்சனம் வந்தபோதிலும் படத்திற்கு நல்ல வரவேற்பும் வசூலும் இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இந்த படத்தின் மொத்த வசூல் முதல் நாள் 34 கோடி ரூபாய் என்றும் இரண்டாம் நாள் வசூல் ரூ.24 கோடி என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அந்த வாய்ப்பை தவற விட்ட நடிகை காஜல் அகர்வால் தற்போது ‘நல்ல வேளை இந்த படத்தில் நடிக்கவில்லை’ என்று கூறுகிறாராம்.

ஆம், ‘தர்பார்’ படத்தில் ரஜினி ஜோடியாக நடிக்க முதலில் காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
ஆனால் தனது கேரக்டரில் எந்த முக்கியத்துவமும் இல்லை என்றவுடன் அந்த கேரக்டரில் நடிக்க முடியாது என்று காஜல் அகர்வால் கூறிவிட்டாராம்

அதனை அடுத்து தான் நயன்தாரா முதலில் படத்தில் ஒப்பந்தமானார். தற்போது படம் வெளிவந்தவுடன் நயன்தாராவின் கேரக்டருக்கு சுத்தமாக முக்கியத்துவமே இல்லை என்று அனைத்து விமர்சனங்களும் கூறி இருப்பதைப் பார்த்தவுடன் ‘நல்லவேளை அந்த இடத்தில் தான் நடிக்கவில்லை’ என்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார் என்று கூறப்படுகிறது.

அதேபோல் இந்தியன் 2′ படத்தில் முதலில் நயன்தாராவிடம் தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் நீண்ட நாள் கால்சீட் கேட்டதால் நயன்தாரா அந்த படத்தில் இருந்து விலகினார். தற்போது அந்த கேரக்டரில் காஜல் அகர்வால் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.